கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

புலிகளின் ஆயுதங்கள் மௌனமாக்கப் பட்ட இந்த சூழ்நிலையில், உலகின் பல்வேறு பாகங்களிலும் ஏன் ஆயுதப் போராட்டம் தோல்வி உற்றது என ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பட்டவர்களும் தத்தமது மனநிலைக்கு ஏற்றவாறு தமது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்து , வாசிபவ்ர்களையும் தூண்டுகின்றனர். இந்த நிலையில் புலிகள் அஹிம்சை வழியில் போரிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பார்கள் என்றும் பலர் எண்ணத் தலைப்பட்டு வருகின்றனர்.

நான் இங்கே, காந்தி வழியை கொச்சை படுத்த விரும்பவில்லை. சில வரலாற்று உதாரணங்களுடன் , ஏன், ஈழத்தமிழரால் அதில் நம்பிக்கை வைக்க முடியவில்லை என்று கூற விரும்புகின்றேன்.
1956 ம ஆண்டு இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற கோஷத்துடன் , பண்டாரநாயக்க ( சந்திரிகாவின் தந்தை ) ஆட்சியைப் பிடித்தார். இதை அவர் சட்டமாக்க முற்பட்டபோது, அன்றைய ஈழத் தமிழ் தலைவர்கள் செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினர். ஏறத் தாழ 4 , 5 மாதங்கள் நடைபெற்ற இந்த சத்தியாகிரகம் , கொழும்பில் பாராளுமன்றத்துக்கு முன்னர் கூடியிருந்த சத்தியாகிரவாதிகளின் மீது சிங்கள குண்டர்கள் நடத்திய தாக்குதலுடனும் நாட்டில் ஏற்பட்ட முதல் இனக்கலவரத்துடன்( http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_riots_of_1958) 300 தமிழ் மக்களை பலிவாங்கி முடிவுக்கு வந்தது.

இதன் பின்னர் 1959 இல் பண்டாரநாயக அந்த சட்டத்தை வாபஸ் வாங்க தீர்மானித்த பொது ஒரு புத்த பிக்குவால் சுடப்பட்டார். இலங்கையின் முதலாவது அரசியல் படுகொலை அது.அதன் பின்னர் அமைதி வழிப் போர்ரடங்கள் நடத்தப்படுவதும் நசுக்கபோவதுமாக இருந்தது.
1974 இல் யாழ்பாணத்தில் நடந்த நான்காம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் (http://en.wikipedia.org/wiki/1974_Tamil_conference_incident) , இலங்கை காவல் துறையினர் புகுந்து சுட 9 தமிழர்கள் பலியாக ஈழ தமிழ் வாலிபர்கள் ஆயுதம் எந்த நிர்பந்திக்கப் பட்டனர். அந்த நேரதில் பெறப்பட்ட வங்க தேச விடுதலை தமிழர்களை உற்சாகம் அடைய செய்தது. உண்மையில் வங்க தேச விடுதலையில் இந்தியாவின் குறுகிய அரசியல் உள்நோக்கம் தெரியாது உணர்ச்சி வசப்பட, வங்க போரில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு உதவிய கோபத்தில் இருந்த இந்தியா அதற்கு கொம்பு சீவிவிட்டது.

பின்னர் 1983 இல் நடைபெற்ற இனக்கலவரம் (http://en.wikipedia.org/wiki/1983_riots) ஏறத்தாழ அனைத்து ஈழத் தமிழர்களையும் ஆயுதப் போராட்டமே முடிவு என்று முடிவெடுக்க வைக்க ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து ஊக்குவித்தது இந்தியா. பின்னர் 1987ல் சிங்கள படைகளின் அட்டுழியம் எல்லை மீறிப்போக உணவுப் பொட்டலங்களுடன் பிரசன்னமானது இந்தியா. பின்னர் இந்திய நலன்களுக்கு முக்கியம் கொடுத்து வரையப்பட்ட ஒப்பந்தம் இலங்கை அரசுடன் கைச்சாத்தாகி , தான் கொடுத்த ஆயுதங்களை தானே களைய ஆரம்பித்தது இந்தியா

இதையே எதிர்பார்த்திருந்த சிங்கள படைகள் போராளிகள் மேல் தாக்குதல் நடத்தி , ஒப்பந்தை அமுல்படுத்தாது இழுத்தடிக்க வேடிக்கை பார்த்தது இந்தியா. அப்போது புலிகளின் அரசியல் துறையை சேர்ந்த தியாகி திலீபன் 12 நாட்கள் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருக்க (http://en.wikipedia.org/wiki/Thileepan) , காந்தி தேசம் வேடிக்கை பார்த்தது. இந்தியா அரசு நினைத்திருந்தால் , அதை தடுத்து பேச்சு வார்த்தையோ அல்லது பிரிடிஷ் அரசு செய்தது போல கைது செய்து வைத்தியசாலையில் சேர்த்திருக்கலாம். இது எதனையும் செய்யாது , நாம் இந்தியா , பிரிடிஷ் அல்ல என நையாண்டி மட்டுமே அன்று ஈழ தமிழருக்கு கிடைத்தது. இவ்வாறான கசப்பான அனுபவங்களே ஈழத் தமிழரை ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைக்க தூண்டி இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது.

நான் இங்கே புலிகளின் தவறுகளையோ போராட்டத்தினை மக்கள் மயப் படுத்தாதையோ நியாயபடுத்த வரவில்லை. நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்று நமது எதிரியே தீர்மானிக்கின்றான் என்ற மா ஒ வின் கருத்துக்கு ஈழத் தமிழர் பலியாகி , ஆயுதம் தூக்க நிர்பந்திக்க பட்டு இந்த நிலைக்கு ஆளாகி விட்டனரே என்ற ஆதங்கத்தில் தான் எழுதுகின்றேன்.
ஒவ்வொரு முடிவும் இன்னொரு தொடக்கம் என்பது உலக நியதி . காத்திருப்போம்

7 comments:

ellam inthiya marrum singkala veriyarkalin seyarpaatu

intha pukaiptangkalil aatum veriyarkal innum aatikonte irukkinranar

ஆம் நண்பரே முப்பது வருடங்களாக ஆட்டம் தொடர்கின்றது இனியும் தொடர்ந்து விடுமோ என்னும் அச்சம் தான் எல்லார் நெஞ்சிலும் ஹ்ம்ம்

ஆயுதம் இன்று தோற்றதால் அகிம்சை வென்று இருக்கும் என தோன்றுகிறது. இதுவே அகிம்சை போராட்டம் நடந்திருந்து தோற்று இருந்தால் ஆயுதம் வென்று இருக்கும் என தோன்றும். எதையும் சொல்ல முடியாது..


ராஜதந்திரம், உலக நாடுகளின் ஒத்துழைப்பு, தவறை கூட சரி என்று சொல்ல வைக்கும் வல்லரசுகளின் ஒத்துழைப்பு தேவை.

உங்களின் முதல் பந்தியுடன் நான் உடன் படுகின்றேன்.ஆனால் வல்லரசுகளின் ஒத்துழைப்பு என்னும் போது, அது வந்து அவர்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும்

//ஆனால் வல்லரசுகளின் ஒத்துழைப்பு என்னும் போது, அது வந்து அவர்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும்//

இப்போது சினாவோ, பாகிஸ்தானோ " தான் எப்படி இலங்கைக்குள் நுழைவது, வேர் ஊன்றுவது " என்ன திட்டம் அவர்களுக்கு உண்டு. யார் யார்க்கு என்ன என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் எனபது ராஜபக்சே விற்கு தெரியும். இந்திய எதற்காக போர் தொடுத்து?, ஜால்ரா போட்டது?, இந்தியவின் நோக்கம் என்ன ? எனபது அறிவு உள்ள எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் அமைதி திரும்பவா ? அல்லது தனிப்பட்ட ஒருவரின் பழி வாங்கவா எனபது,18 வருடம் காத்திருந்து பழி தீர்த்து கொண்டவர் யார் எனபது தெரியும்.

அந்த அந்த நாடு தன் சுய நலத்திற்க்காக இருந்த போதிலும், அவர்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும் போதிலும்,
ராஜபக்சே சுயநலத்திற்கு பயன் படுத்தி கொண்டான்.
இதே போல் வல்லரசுகளின் அவர்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கும் விசயத்தில் நாம் நம் எண்ணங்களை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அதுவே முக்கியம். உலகமே ராஜ தந்திரம் நிறைந்தது. ஆயுதத்திற்கு எவ்வளவு முக்கியத்துவமோ அவ்வளவு ராஜ தந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வணக்கம் செந்தேள், நீங்கள் சொல்வது சரிதான், வீரம் இருந்தளவு , விவேகம் இருக்கவில்லை. ராஜதந்திரத்தின் மறு பெயர் தானோ சந்தர்ப்பவாதம் ? அதுவும் நம்மிடத்தில் இல்லையே