கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

நேற்று ராஜபக்ச விட்ட அறிக்கையில் , இந்தியாவை , சோனியா காந்தியை , மன்மோகன் சிங்கை மற்றும் தமிழக மக்களை பெரிதாக பாராட்டி அறிக்கை விட்டிருந்தான். இந்தியாவின் ஆதரவு தனக்கு மிகவும் நிம்மதி அளித்ததாகவும் ஐநா சபையில் தப்பிய மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் சோனியாவையோ , மன்மோகனையோ பாராட்டியதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியம் இருக்கவில்லை. ஆனால் அவனது தமிழக மக்கள் மேலான பாராட்டுதான் என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. என்ன ஒரு வஞ்சப் புகழ்ச்சி. அவன் வார்த்தைகளில் தொக்கி நிற்பது , ஈழத்தில் என்ன நடந்தாலும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். எதோ வருத்தப்பட்டு பேசிவிட்டு தமது கடமை முடிந்தது என்று போய்விடுவார்கள் எனபதுதான்.

இதே மாதிரியான ஒரு ஒத்த கருத்தை என்னுடன் பணிபுரியும் சற்றே நடுநிலைமையான ஒரு சிங்களவனும் பகிர்ந்திருந்தான் . நாங்கள் நினைத்தோம் இந்திய அரசும் தமிழக மக்களும் எங்களை ஒரு வழி பண்ணுவார்கள் என்று. ஆனால் தங்களை தாங்கள் வருத்திக் கொண்டு , வேலை நிறுத்தம் பண்ணிக்கொண்டு தீயிட்டு எரித்துக்கொண்டு அமைதியாகி விட்டனர். இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் பிரச்னை எமக்கு தெரியும். ஆனால் தமிழகத்துக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை? தமிழகத்தில் மாட்டும் நாங்கள் ( சிங்களவர்கள் ) இருந்து இலங்கையில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருந்து துன்பம் அனுபவித்திருந்தால் , இன்னொரு விடுதலை போராட்டமே நாம் அந்த நாட்டில் நடத்தியிருப்போம் என்றான். மேலும் தமிழக தமிழர்கள் எப்படி இந்தியா பெரிதும் உணர்வுகளை புரிந்து கொள்ளாவிட்டாலும் சமாளித்துக் கொண்டு வாழ்கின்றனர் , ஏன் நீங்கள் அவ்வாறு இருக்க கூடாது என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டான் . அவனுக்கு ராஜீவ் கொலை பற்றியெல்லாம் விளக்கி தமிழகத்தை காப்பாற்ற முனைந்தேன். ஒரே ஒரு வசனம் சொன்னான் , நான் ஒரு சிங்களவன் , என்னக்கு தெரியும் 50 000 மக்கள் கொல்லப்பட்டது . அவர்களை கொல்லாது புலிகளை அழிக்கமுடியாது எனத் தெரிந்த எனக்கே சிறிது அனுதாபமுள்ளது. குற்ற உணர்ச்சி உள்ளது . ஆனால் எவ்வாறு தமிழக மக்கள் இந்திய படை அனுப்பி 10 000 மக்களை கொன்று குவித்த ராஜீவுக்காக , இந்த 50 000 மக்களின் கொலைக்கு காரணம் சொல்லி அமைதியாகி விட்டனர் என்று மேலும் கேட்டான். நான் தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்களை அவனுக்கு எடுத்து கூறினேன். அவனோ , அதான் தேர்தலில் பார்த்தோமே தமிழக மக்களின் மன நிலையை என்றான் ஏளனமாக. என்னால் பெருமூச்சுதான் விட முடிந்தது.

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக , தமிழக மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான தேர்தலை ஈழத்துக்கான கருத்துக்கணிப்பாக மாற்ற முற்பட்டு அதில் தோல்வியுற்று முழு உலகத்துக்கும் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவில்லை எனக் காட்டி தற்போது ராஜபக்ச கையால் சான்றிதழ் பெறவும் வைத்துவிட்டனர்.எதிகால வரலாற்றிலும் தமிழ் ஈனத் தலைவர்களாக பெயரும் எடுத்து விட்டனர்.

12 comments:

இதை படிக்கும்போது இயலாமையை நினைத்துஅவமானமாக இருக்கிறது.

அன்பு நண்பரே, அவமானப்பட ஒன்றுமில்லை , இந்த கொடுமைகளை அவலங்களை உங்களால் முடிந்தளவு உங்கள் நண்பர்கள் உறவினர்கள் கல்லூரி அலுவலகம் வழிபாட்டிடம் என்று எடுத்து செல்லுங்கள் . காலம் தாழ்த்தியாவது நீதி கிடைக்கட்டும்

வணக்கம் காணான்

என் முகக்கரி எனக்கு தெரிகின்றது, 100 பேருக்கு முன் இடுப்பு துணியை உருவியதுபோல் உணருகின்றேன்

\\காலம் தாழ்த்தியாவது நீதி கிடைக்கட்டும் \\
காலம் தாழ்ந்து கிடைப்பது நீதியல்ல -- பிச்சை

இராஜராஜன்

பிச்சை எனபது காலம் கடந்து கிடைப்பது என்று எவ்வாறு கூறுகின்றீர்கள்? இலங்கை உடனுக்குடன் பிச்சை பெற்றதே ?

inthiya onaaikal nampavaithu kalutharuthu vittanave

இந்தியா மட்டுமல்ல எல்லா நாடுகளும் தத்தமது நலனுக்கேற்ப செயற்பட்டன , அதற்கேற்ப நாம் எமது திட்டங்களை வகுக்க வேண்டும் . புலம் பெயர் தமிழர்களின் போராட்டம் காலம் பிந்தியதேன்றாலும் , மேலை நாடுகளை ஐ நா சபையில் ஆதரித்து எமக்காக வாக்களிக்க வைத்தது

எல்லா நாடுகளும் அப்படி செயற்பட்டபோது ஏன் இந்தியாவை மட்டும் போட்டு தாக்குகிறீர்கள்?

எல்லா நாடுகளும் இந்தியாவும் ஒன்றல்ல. ஈழ மக்களும் தமிழக மக்களும் ஒரே மொழி பேசுவோர் மற்றும் இந்தியாவில் உள்ள மதங்களே ஈழத்திலும் கடைப்பிடிக்கப் படுகின்றன. ஒரே கலாச்சாரமே நிலவுகின்றது. இந்நிலையில் இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட முடியாது

போங்கடா டேய் , உங்களுக்கெல்லாம் அரசியலே புரியாதாடா , நம்ம ஊரு மக்களையே நாம பளிபோடுவோம் நமக்காக , நீங்க யாருடா கேக்க

நண்பரே நீங்கள் குழப்பம் விளைவிக்கவே கருத்து பதிக்கிறீர்கள். தெளிவு பெறுங்கள்

நான் இந்தியாவில் இருந்த படியாலும், அனர்த்தம் நடந்த வேளையில் இந்தியாவில் இருந்த படியாலும் எனக்கு நங்கு புரிந்தது. தமிழர்கள் நொந்து போயுள்ளார்கள். நல்ல தலைமை கிடையாது. நான் சொல்வது தமிழர்களைப் பற்றி. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சௌடாஷ்ராகார்னும், தெலுங்கனும் தான் ஆதிக்கம். கொங்கு நாட்டில் கன்னடர்.அப்புறம் எப்படி தமிழன் கத்துறது எடுபடும்?
தமிழ் மக்களுக்கு அறிவூட்ட வேண்டும் நாடில்லாவிட்டாலும் ஒற்றுமையாய், பலமாய் இருக்க அதாவது உதவும். இல்லாவிட்டால் எனது பேரப் பிள்ளைகள் தமிழின் வரலாற்றை விக்கிபீடியாவில் தான் தேட வேண்டும்.

நன்றாக சொன்னீர்கள் புகழினி. எப்போது தமிழகம் பிற மொழி ஆதிகத்திலிருந்து விடுபடுமோ அன்று தான் , தமிழனின் குரல் ஒலிக்கும். பத்திரிகை என்றால் சோ , ராம், கலை என்றால் கேட்கவே வேண்டாம் எல்லோரும் வேற்று மொழியினர் எப்படி வரும் உணர்ச்சி ?