சமீபத்தில் நடந்து முடிந்த யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் ராஜபக்சவின் கட்சி, டக்ளஸ் குழுவுடன் கட்டாயக் கூட்டணி வைத்து இரண்டாயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. இந்த நேரத்தில் யாழ் மக்கள் ,தமிழின படுகொலைகளை நடாத்திய ராஜபக்ச மற்றும் அதன் துணை ராணுவக் குழுக்களுக்கு வாக்களித்து ,பல்வேறு மட்டங்களிலும் வியப்பலைகளை உருவாக்கி இருக்கின்றது.ஆனால் தேர்தல் முடிவுகளை நன்கு ஆராய்ந்தோமானால், ராஜபக்ச கட்சியின் தில்லுமுல்லுகள் வெட்ட வெளிச்சமாகும்.
யாழ் மாநகர சபைக்கு பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் ஒரு லட்சம். வாக்களித்தொரோ 22000 , இதில் ராஜபக்ச கட்சி 10600 , தமிழ் தேசிய கூட்டமைப்பு 8000, முஸ்லிம் சுயேச்சைக் குழு 1100 ,ஆனந்தசங்கரி 1000 என வாக்குகளை பெற்றிருக்கின்றனர். இந்த தேர்தலில் ஏறத்தாள 3000 முஸ்லிம் சகோதரர்கள் , புத்தளத்திலிருந்து வாக்களித்து 5 ஆசனங்களை முறையே ராஜபக்ச கட்சியிலிருந்து 4 மற்றும் முஸ்லிம் சுயேச்சைக் குழுவிடமிருந்து 1 எனப் பெற்றிருக்கின்றனர். எனவே இந்த 3000 வாக்குகளில் 2000 வாக்குகள் ராஜபக்ச கட்சியிக்கும் 1000 வாக்குகள் முஸ்லிம் சுயேச்சைக் குழுவுக்கும் சென்றதாக எடுத்துக்கொள்ளலாம். ஆக, ராஜபக்ச கட்சி பெற்றது 8600 தமிழ் வாக்குகளையே.
ராஜபக்ச கட்சி கைப்பற்றிய தமிழ் வாக்குகள் கூட நீதிக்கு புறம்பாக பெறப்பட்டனவே. தேர்தலுக்கு முந்தியவாரம் ஏறத்தாள 3000 மக்கள் வவுனியா முட்கம்பி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்டு யாழ் குரு நகரில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் அவ்வாறு மீள் குடியமர்த்தபடுவதற்கு காரணம் யாழ் தேர்தல்.அந்த மக்கள் ராஜபக்ச கட்சிக்கே வாக்களிக்கவேண்டும் என அச்சுறுத்தப்பட்டனர். அதில் 1500 பேர்களை வாக்காளர்களாக கொண்டால் , ராஜபக்ச மற்றும் டக்ளஸ் குழு பெற்றது 7000 வாக்குகளே. இதில் வாக்களிக்குமாறு அச்சுறுத்தப்பட்ட மீனவர்கள் மற்றும் வேலையில்லாத பட்டதாரிகள் எண்ணிக்கை வேறு.
இந்த நிலையில் வெறுமனே நாம் இவ்வாறான கூட்டிக் கழித்தல்களை மேற்க் கொள்ளாது , இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என சிந்திக்கவேண்டும். ஏனெனில் வெகு விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த காலப் பகுதியில் , முட்கம்பிகளுக்குள் அடைக்கபட்டிருக்கும் அந்த ௩.௫ லட்சம் மக்களும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் வரை அடைத்து வைக்கப்பட்டு . ராஜபக்ச கட்சியிக்கு வாக்களிக்குமாறு அச்சுறுத்தப் படுவார்கள். இதை முறியடிக்க தமிழ் தேசிய வாதிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்
என்னைப் பற்றி....
Welcome
Blog Archive
-
▼
2009
(18)
-
►
June
(6)
- ராஜிவ் காந்தி கொலையே , இந்தியாவின் ஈழத் தமிழின ஒழி...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - வரலாற்றுத் தேவை
- இனவெறி யுத்த வெற்றி இலங்கைக்கு T20 உலக கிண்ணத்தை ப...
- காந்தியின் உண்ணாவிரதம் - இன்று ??? அல்லது பாந்த...
- மாற்றுக் கருத்தாளர் ரயாகரனுக்கு ஒரு வேண்டுகோள் : ...
- (ஏ) மாற்று கருத்தாளர்களின் அடுத்த இலக்கு யார்?
-
►
June
(6)
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
துயரமும் அவநம்பிக்கையும் சூழ்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் தமிழ் உணர்வாளர்களும் தமிழின விரோதிகளும் தத்தமது நிலைக்கேற்ப கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எப்போதும் தமிழினத்திற்கு எதிராகவே நச்சை உமிழும் விரோதிகள் ஒரேயணியில் இருந்து கொண்டு,எவ்வாறு புலிகளும் தலைவரும் கொல்லப்பட்டனர் என்று வர்ணித்து புளாங்கிதம் அடைய, தமிழின உணர்வாளர்களோ என்ன செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். இதில் ஒருபிரிவினர் , தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்றும் இனி ஆகவேண்டியதை பார்த்து போராட்டத்தை ஜனநாயகவழியில் முன்னெடுத்து செல்லவேண்டும் என்று செயற்படுகின்றனர். மற்றைய பிரிவினரோ,இல்லை தலைவரும் புலிகளும் காடுகளில் பதுங்கி உள்ளனர் என்று கூறிவருகின்றனர்.
இந்த இரண்டாவது பிரிவினருள், பழ.நெடுமாறன், வைகோ மற்றும் திருமாளவன் அடங்குவர். இவர்கள் அடிக்கடி , ஈழப்போராட்டம் விரைவில் புலிகளின் தலைவர் தலைமையில் தொடங்கும் என்றும் காடுகளில் பதுங்கியிருக்கும் இருபதனாயிரம் புலிகளும் அப்போது வெளிப்படுவர் என்றும் பேசிவருகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், கோடிகணக்கான தமிழர்களுக்கு அதைவிட மகிழ்ச்சியான செய்தி இருக்கமுடியாது.ஆயினும் உண்மையை உறுதிபடுத்திக் கொள்ளமுடியாதிருக்கும் இந்த காலப்பகுதியில்,இவ்வாறான கூற்றுகளும் அறிக்கைகளும் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை தடுப்பதாகவே அமையும்.
புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்தார் என்று செய்தியானது , ஒரு மிகப்பெரும் எழுச்சியையும் ஆர்பாட்டங்களையும்,தமிழகம் மற்றும் புலம் பெயர் நாடுகளில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு,"உயிருடன் உள்ளார்" என்று செய்தி வந்தபின்னர், அனைத்துமே நீர்க்குமிழி போல அடங்கிப் போய்விட்டன. இன்றுவரை மரணித்த அந்த வீரர்களுக்கு எந்தவொரு அஞ்சலிக் கூட்டங்களைக் கூட நடத்த முடியவில்லை.
"உயிருடன் உள்ளார்" என்பதற்கு பலமான வாதங்கள் இருக்கலாம். ஆனால் "உயிருடன் உள்ளார்" என்று நம்பி, அடுத்தகட்டத்திற்கு நகராது காத்திருந்து பற்பல ஆண்டுகளின் பின்னர் "வர முடியாது" எனும் நிலைஏற்படும் போது, எல்லாமே கைமீறிப் போயிருக்கும். அதைவிட , "இல்லை" என்று எழுச்சி கொண்டு போராட்டத்தினை வீறு கொண்டு நடத்தினோமானால், பின்னர் புலிகளின் தலைவர் மீண்டும் பிரசன்னமாக வரும் சூழ்நிலை ஏற்படின் அதைவிட ஒரு மகிழ்ச்சி உலகத்தமிழர்களுக்கு இருக்கப் போவதில்லை.
இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இல்லையென்று அடித்துக் கூறி மகிழ்ச்சிக் கூத்தாடும் தமிழின விரோதிகளின் செயற்பாடுகள், ஈழப் போராட்டத்திற்கு உரம் சேர்க்க, "உள்ளார்" என்று கூறி வரும் தமிழன உணர்வாளர்களின் செயற்பாடுகள், போராட்டத்தினை முடக்கவே பயன்படுகின்றது என்பதே யதார்த்தம். எனவே யாதர்த்தம் புரிந்து செயற்படுவோம்.
இன்று உலகெங்கும் குறிப்பாக இலங்கை போன்ற இனவெறி நாடுகளில் "ஒரு கொடி - ஒரே தேசம்( One Flag - One Nation)" என்னும் முழக்கங்கள் வானளாவ ஒழித்து , சிறுபான்மை இனங்களின் கழுத்தை நெரிக்கின்றன. சாதாரணமாகப் பார்க்கும் பொழுது நாடு(Country) மற்றும் தேசம்(Nation) என்னும் இருவேறு சொற்களும் ஒரே அர்த்தத்தினை தந்தாலும், இவ்விரு சொற்களும் வேறுபட்டவை.நாடு என்பது , ஒரு அரசியல் நிர்வாகத்திற்கு உட்பட்டு அரசியல் காட்சிகளாலோ அல்லது தனி மனிதர்களாலோ ஆளப்படுவது. தேசம் என்பதோ, ஒரு பொதுவான பண்பாட்டையோ , மொழியினையோ அல்லது மதத்தையோ பின்பற்றி வரும் மக்கள் கூட்டத்தைக் குறிப்பது. அதாவது ஒவ்வொரு தனித்தன்மையான தேசிய இனங்களையும் ஒரு தேசமாக கருதலாம்.
அந்தவகையில் பார்க்கும் போது இலங்கை என்னும் "நாட்டுக்குள்" சிங்கள,தமிழ் மற்றும் முஸ்லிம் எனும் மூன்று "தேசங்கள்" வாழ்கின்றன. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது , இது ஒரே ஒரு தேசம் , இங்கு சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது என்று கூக்குரலிட்டு, சிறுபான்மை இனங்களை விழுங்கத் துடிக்கும் சிங்கள பேரினவாதம் சாதிக்கப் போவது வெறுமனே அவநம்பிக்கைகளையும் இனங்களுக்கிடையே மேலும் விரிசல்களையும் தான்.
இதயத்து குமுறல்கள் தணிக்கை செய்யப்படாவிடில்
இம்மியும் உடல் கிடைக்காத கொலைகார தேசம்.
அங்கே முட்கம்பிகளுக்குள் கிழிபடும் எமதுயிர் உறவுகள்.
அவர்தம் உதடுகள் வெடிக்கும் எதற்கும் "புலி"தான் காரணம்.
உலகம் பதியும் வரலாற்றில் இவர்கள் "சூழ்நிலைக் கைதிகள்"
ஆனால் தமிழர்கொடி பட்டொளி வீசிய முழுமதிக் காலத்தில்
அந்தக் கொடிநிழலில் வாழ்க்கையோட்டி ஈழம் விற்று
தமிழ் தேசியம் பேசிய புலம்பெயர் உதடுகள் சில - இன்று
யதார்த்தம் பேசி தேய்பிறைக் காலத்திலும் குரைகின்றன.
நாம் ஒளியிழந்த இந்த அமாவாசைக் காலத்தில்
முதலையோ மெய்யோ,கண்ணீருக்கு இல்லை வித்தியாசம்.
அனைத்தையும் மறைக்கின்றது இருட்டு
நாளை இருள் நீங்கும் ஒரு வைகறைப் பொழுதில்
வரலாறு பெயரிடும் இவர்கள் "சந்தர்ப்பவாதிகள்"
இந்து பத்திரிகை பற்றியோ அல்லது என். ராம் பற்றியோ எவ்வித அறிமுகமும் கொடுக்கதேவையில்லை.நூற்றாண்டு காலாமாக,பத்திரிகைத் தொழிலை நடத்தி வரும் குடும்ப பாரம்பரியத்தை உடையவர் இந்த ராம். இலங்கையில் பதவியிலிருந்த அனைத்து ஜனாதிபதிகளுடன் தனிப்பட்ட நட்பு பாராட்டிவருபவர். இந்த நட்பு எப்படிப்பட்டது எனில் , ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டாலும் இந்த நட்பு மென்மேலும் இருகுமே தவிர விரிசல் காணாது. ராமுக்கு சிங்கள ரத்னா விருது வழங்கியதும் இந்த நட்புதான், எழுதமுடியாத இன்னபல வழங்கியதும் இந்த நட்புதான்.
சிங்கள அரசு அகதி முகாம் என்ற போர்வையில் நடத்திவரும் வதைமுகாம்களுக்கு சிங்கள அரசினர் மற்றும் அரச ஊடகங்கள் தவிர யாரும் செல்ல அனுமதி கிடையாது. சிங்கள எதிர்க் கட்சியினர் கூட அங்கு செல்ல முடியாத நிலையே காணபடுகின்றது. ஐ நா செயலர் வந்த ஒருதடவை மட்டும் வெளிநாட்டு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் அங்குள்ள மக்களை சுதந்திரமாக ஊடகவியலாளர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.
இந்த நிலையிலேயே இந்து ராமின் விஜயமும் இடம்பெற்றிருந்தது. அப்படியே முழு பூசணிகாயை மறைத்து , முகாமின் தரத்தை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்திருக்கும் ராம் , இறுதியாக , தமிழக அரசு நடத்தி வரும் முகாமை விட பல மடங்கு சிறந்தது சிங்கள அரசு நடத்தி வரும் வதை முகாம் என்று கூறி இந்திய தமிழக அரசுகளின் லட்சணத்தையும் போட்டுடைக்கிறார். ஒருவேளை இந்திய குடிஉரிமை துறந்து ரகசியமாக சிங்கள குடிமகனாக மாறிவிட்டாரோ தெரியவில்லை. இங்கே இந்து ராமின் கருத்துகள் , ஐ நா செயலர், இலங்கை தலைமை நீதிபதி , அனைத்துலக பத்திரிகைகள் ஆகியவற்றின் கருத்துகளுடன் நூறு சதவீதம் மாறுபடுகின்றது. சிங்கள அரசின் எலும்புத் துண்டுக்காக ஐ நா செயலரையே பொய்யராக்கி விட்டார் இந்த ராம்.
இதுவரை காலமும் புலிகளின் பெயரைச் சொல்லி , சிங்கள அரசை நியாயப் படுத்திவந்த ராம் போன்ற பத்திரிக்கையாளர்கள் இப்போது என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள் ? உண்மையில் இவர்களது வெறுப்பெல்லாம் பாவப் பட்ட ஈழத் தமிழினம் மேல்தான். அடக்கப் பட்ட தமிழினம் உரிமை கூறி போராடுவதை இவர்களால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.இந்த நிலையில் , அடுத்துவரும் நாட்களில் யார் யார் எல்லாம் சிங்கள அரசின் விருந்தினராக சென்று முகாம்களுக்கு தரச் சான்றிதழ் கொடுக்க போகின்றார்கள் என்று சிந்தித்தால் பின்வரும் புத்திஜீவிகள் சோ , சுப்பிரமணியன் சுவாமி , மணிசங்கர் அய்யர் மற்றும் இளங்கோவன் போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை.
இந்து ராம் கூறியதற்கு பலபடி மேலே போய், தமிழக மக்களின் குடியிருப்புகளை விட சிங்கள அகதி மற்றும் வதை முகாம் சிறப்பானது எனற கருத்துகளை இவர்கள் உதிர்த்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.நாம்தான் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டோமே.
தொடர்புடைய செய்திகள்
யாருக்கு தூதுவர்களாக செயற்படுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்: 'தினமணி' சாடல்
செட்டிக்குளம் முகாமின் அவலம்: குடிதண்ணீரைப் பெறுவதற்கே 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கும் மக்கள்
மாணிக் பார்மில் வாரத்திற்கு 1400 தமிழர்கள் அநியாயமாக சாவு
ஈழத்தில் போர் உக்கிரமாக நடைபெற்று எமது உறவுகள் எல்லாம் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில்அதுவரை இலங்கை என்னும் நாடு உள்ளதே தமக்கு தெரியாதுபோல மௌனம் சாதித்து வந்த வடஇந்திய ஊடகங்கள் கூட ,இந்தப் பிரச்னை பற்றி செய்திவழங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.இதற்கு முக்கிய காரணம் மேலைநாட்டு ஊடகங்கள் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு முக்கியம் கொடுக்க தொடங்கியமையாகும்.இதில் வேதனை தரும் விடயம் என்னவெனில் இந்த வட இந்திய ஊடகங்கள், ஸ்ரீ லங்கா அரசின் ஊதுகுழல்கள் போல , சிங்கள அரசு தந்த தகவல்களை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு வெளியிட்டன. ஈழத் தமிழ்ப் படுகொலையை அப்படியே மூடி மறைத்தன. ஓரிருவர் விபத்தில் சிக்கி இறந்தாலே , நாள் முழுக்க செய்தி கூறும் இந்த ஊடகங்கள் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர் கொல்லப் பட்டதை அப்படியே இருட்டடிப்பு செய்தன.அத்துடன் ஈழத் தமிழர் மீதும் புலிகள் மீதும் சிறிதளவேனும் அனுதாபம் வரக்கூடாது என்பதற்காக , "ராஜிவ் காந்தியைக் கொலை செய்த பயங்கரவாதிகள்" என்று கூவிக் கூவி
முத்திரை குத்தின.
பொதுவாக வட இந்திய தொலைக்காட்சிகள் செய்திகளை ஒளிபரப்பும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்துவது வழக்கம். ஈழப்பிரச்சனைக்காக அவ்வாறு அழைக்கப்பட்டவர்கள் யார் யார் என்று பார்த்தால் தமிழின உணர்வுள்ள ஒவ்வொருவரின் இதயத்திலிருந்தும் வேதனை பீறிடும். இந்து ராம் , சோ மற்றும் சுபிரமணியன் சுவாமி என்னும் தமிழின விரோதிகளே அவர்கள்.வட இந்திய ஊடகங்களுக்கு இவர்களை தவிர தமிழகத்தில் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் எவரும் இல்லையா என்ற ஆதங்கமே எழுகின்றது.இவர்களினது தமிழ் தேசிய விரோதப் போக்கும் , ஈழம், காவிரி மற்றும் சேது சமுத்திர நிலைப்பாடும் உலகறிந்தவை.வட இந்திய ஊடகங்கள் தாம் எதிர்பார்க்கும் பதிலுக்காக இவர்களை அழைத்து தமிழகபுத்திஜீவிகளாக வடஇந்தியர்களுக்கு அறிமுகப் படுத்த இவர்களும் ,புலிகள் அழிக்கப் பட்டதில் அனைத்து தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி ,எந்த ஒரு ஈழத் தமிழனும் இதுவரை இலங்கையில் கொல்லப் படவில்லை என்று முத்துகளை உதிர்ப்பார்கள்.வட இந்திய ஊடகங்களும் இதுவே தமிழக மக்களின் எண்ணவோட்டம் என இனிதே செய்தி அரங்கத்தை நிறைவு செய்யும்.
இந்தியாவின் சுதந்திரத்துக்காக உண்மையிலேயே பாடுபட்டவர்கள் எல்லாம் கொல்லப்படும் அந்தமான் சிறைகளிலும் வாழ்க்கையைத் தொலைக்க , வெள்ளையர்களுடன் ஒட்டி உறவாடி ,வெள்ளையினப் பெண்களுடன் "நட்பு" பாராட்டிய நேரு மற்றும் அவரது சகபாடிகளே , வெள்ளையின அரசால் இந்தியாவை ஆள அனுமதிக்கப் பட்டனர். அது போல , வட இந்திய ஊடகங்களும் தமது விருப்பு வெறுப்புகேற்ப, தமிழகத்தின் குரலை தாமே உருவாக்குகின்றன. அப்பாவித் தமிழர் நாமோ வழமை போல கொர்ர்ர்ர்ர் ....
01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஈழத் தீவினில் துன்பத்தில் உழல தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்டமையால் வந்தது.
எமக்கு எம்மையே வெறுக்கும்படி ஆனபின் பெயர் மட்டும் பிடிக்குமா ?
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசியாக எப்போது சிரித்தீர்கள் என்று கேட்டிருந்தால் சில வேளை பதில் அளித்திருக்க முடியும். அழுது கொண்டே இருப்பவரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வது
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
தலையெழுத்தே துன்பம் என்றான பின்பு கை எழுத்தாவது கால் எழுத்தாவது.
4.பிடித்த மதிய உணவு என்ன?
பட்டினியாகக் கிடக்கும் எமக்கு எது கிடைத்தாலும் அது பிடித்த உணவுதான்.அது எலிக் கறியோ ,கீரைக் கஞ்சியோ
5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நிச்சயமாக மாட்டேன். தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்த சொந்தங்களே முதுகில் குத்தும் ஒருவனுக்கு நீதி நியாயம் இருந்த காலமானால் நட்பு வைத்து உதவலாம். ஆனால் இந்த சுயநல உலகத்தில் எப்படி நட்பு வைத்துக்கொள்ள முடியும் . என்ன கருணாநிதி அவர்களே சரிதானே?
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அகதி முகாமில் குடிக்கவே தண்ணீர் இல்லாது அல்லல் படுபவனிடம் நல்ல கேள்வி ஐயா கேட்கிறீர்கள்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கையில் பயங்கர ஆயுதமிருக்கா என்றே பார்ப்போம்
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டோமே பிடித்த விஷயம் என்று ஒன்றும் கிடையாது. அப்படி நினைக்கவும் எமக்கு உரிமை கிடையாது.
பிடிக்காத விடயம் என்றால், இந்த பாழாப் போன இன உணர்வு , தன்மானம் மற்றும் சூடு சுரணை. இவை இருந்ததால் தானே எமது கதி இப்படியாகிப் போனது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
சரி பாதி என்றால் , தமிழக சகோதரர்கள் தானே ?
பிடித்தது , பக்கத்தில் இடியே விழுந்ததாலும் அமைதியாக இருப்பது. அது ஈழமாகட்டும் காவிரியாகட்டும் .
பிடிக்காதது என்றால் , எதுவுமே கிடையாது. ஹ்ம்ம்
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
எமக்கெல்லாம் இதுவரை காவல் தெய்வமாக இருந்தவர்கள் பக்கத்தில் இல்லையே இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க என்று வருந்துகின்றோம்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இதை எழுதும்போது மட்டுமல்ல எம்மிடம் எப்போது இருப்பதும் இந்த ஒரே கந்தலாடைதான். அதற்கு நிறமே கிடையாது.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
யாரை நம்பி நாம் பிறந்தோம் மற்றும் ஆண்டவனைப் பார்க்கணும் அவனுக்கு ஊத்தணும்
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
இப்பவே எங்கள் ரத்த மை எடுத்துதானே , உலக ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன.
14.பிடித்த மணம்?
ஆண்டாண்டு காலமாக இந்த வெடி குண்டு மணத்திலும் பிண நாற்றம் மத்தியில் வாழ்ந்து , அதுவே பழகிவிட்டது
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
மீண்டும் பிடித்த விடயமா ? எங்களுக்கு அந்த உரிமையே கிடையாது கனவான்களே.
17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கையே எமக்கு மரண விளையாட்டு.
18.கண்ணாடி அணிபவரா?
எதைப் படிக்க போகின்றோம் இந்த முட்கம்பி முகாமில் , எதுவுமே இல்லையே எதுக்கு கண்ணாடி ?
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மூச் மீண்டும் "பிடிக்கும்"
20.கடைசியாகப் பார்த்த படம்?
தூள் காமெடி ஸ்டைலில் கருணாநிதியின் உண்ணாவிரதம். சூப்பரா இருந்தது.
21.பிடித்த பருவ காலம் எது?
ஹ்ம்ம் . மழை வந்தால் அகதி முகாம் வெள்ளக் காடாகும் வெய்யில் வந்தால் வெப்பு நோய்கள் தாக்கும். எதைத்தான் சொல்வது ?
22.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
மூச் , புத்தகம் படித்து புரட்சி செய்ய போகின்றாயா என்று அருமை சிங்கள ராணுவத்தினர் , முகாமில் வைத்தே போட்டுத் தள்ளிவிடுவார்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படின்னா ? நாங்கள் மேசையைப் பார்த்தே பல காலம்
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
யுத்த விமானம் குண்டு வீசிப் போனபின்பு ஒரு சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்டே பதுங்கு குழியை விட்டு வெளியே வருவோம். அதுவே பிடித்த சத்தம்.
பிடிக்காதது என்றால் , இப்பொழுது காந்தியமும் அகிம்சையும் போதிக்கும் சந்தர்பவாதிகளின் குரலொலி.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வீட்டைத் தொலைத்தே நாட்கள் பல ஆகிவிட்டன. இதில் தொலைவு எங்கே பார்க்க
26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
சத்தமாக கேட்காதீர்கள் , தமிழன் உனக்கேன் தனித்திறமை என்று போட்டுத் தள்ளிவிடப் போகிறார்கள்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
யார் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம் , ஏனெறால் நாங்கள் ஈழத்தமிழர். எமகென்று ஒரு விருப்போ கருத்தோ கிடையாது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எங்களை சூழத் தான் எல்லா சாத்தான் நாடுகளும் இருகின்றனவே
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சிங்கள அரசு மற்றும் இந்திய ராணுவம் தயவால் இலங்கை முழுக்க கால் நடையாகவே பெட்டி படுக்கைகளுடன் சுத்தி பார்த்தாச்சு , ஏன் ராமேஸ்வரம் ,மேலை நாடுகள் முழுக்க புலம் பெயர்ந்தவர்களாக சுற்றுலா போயாச்சு.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஏற்கனவே சொல்லியாச்சே , எமகென்று ஆசையோ கருத்தோ கிடையாது.
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
சொந்த மனைவியையே கண்முன்னால் இழுத்து செல்வதை பார்க்கும் போது, மனைவி இல்லாமல் போகட்டும் என்பதே பிரார்த்தனை.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
நரகம்
பதிவை வாசிக்கும் முன் ,சில உணர்ச்சித் திலகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இந்தப் பதிவு ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி இடப்பட்டதல்ல.எந்த ஒரு கொலையையும் எந்த ஒரு நாகரிக மனிதனாலும் நியாயப் படுத்த முடியாது.இங்கே எனது நோக்கமானது,இன்று பலரால் நீட்டி முழங்கப் படுவது போல,"புலிகள் மட்டும் ராஜிவ் கொலையைப் பண்ணாமலிருந்தால் முழு இந்தியாவுமே ஈழத் தமிழர்களின் பின்னாலிருக்கும்" என்பது எவ்வளவு முட்டாள்தனமானது என ஆராய்வது மட்டுமே.உலகில் எந்த ஒரு நாடும் தனது நலன்களுக்கு மற்றும் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தே மற்றைய நாடுகளில் தலையிடுமே தவிர ,சமுக சேவை செய்து நீதியை நிலை நாட்டவேண்டும் என்று மூக்கை நுழைப்பதில்லை.இந்தியாவுக்கும் அவ்வாறான பின்வரும் நோகங்கள் இருந்தன
1. சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நெருங்கி வரும் இலங்கையை தட்டி வைப்பது
2. இலங்கை அரசு , அமெரிக்க வானொலி நிலையத்தினை திருகோணமலையில் நிறுவ அனுமதித்து தனது மேற்குலகு சார்ந்த நிலையை வேளிகாட்டியத்தை முளையிலே கிள்ளுவது
3. திறந்த பொருளாதாரக் கொள்கையை 1977ல் அதாவது இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் கைக்கொண்டு 92வீத எழுத்தறிவுடன் (இந்தியாவில் அப்போது 36 வீதம்) இலங்கை அடையத் தொடங்கிய துரித வளர்ச்சியினைத் தடுப்பது.
இதைத் தவிர யாராவது இந்திய மத்திய அரசு ,ஈழத் தமிழர் மேலுள்ள அக்கறையால் என வாதிட்டார்களானால், உலக நடப்பு தெரியாத அப்பாவிகள் என்றே அவர்களை அழைக்கலாம். நான் இங்கே தமிழக தமிழர்களின் இனஉணர்வு பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. இந்தியா என்னும் போது இந்திய மத்திய அரசையே குறிக்கும்.
இந்திரா காந்தி ஈழத் தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கி தமிழ் நாட்டில் புகலிடமும் வழங்கப்பட்டது. இங்கே ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.குழு மோதல் தொடங்காத அந்தக் காலத்திலேயே அனைத்து குழுக்களும் தனித் தனியேயே தங்க வைக்கப்பட்டன. ஏறத்தாள கூலிபடைகள் போலவே இந்த இயக்கங்கள் நடத்தப்பட்டன.இதை அனைத்து இயக்கங்களும் உணர்ந்தே இருந்தன. இந்தியா எதிபார்த்த மாதிரியே , இலங்கை அரசு இந்தியாவின் காலடியில் விழுந்தது.
திருகோணமலை எரிபொருள் களஞ்சியங்கள் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டு , வெளியுறவுக் கொள்கையில் இந்திய நலனுக்கெதிராக செயற்படமாட்டோம் என இலங்கை அரசு அறிவித்த மறு நிமிடமே , இந்தியா தான் கூலிப்படைகள் என அழைத்த தமிழீழ இயக்கங்களை ஆயுதத்தை போடுமாறு வற்புறுத்தியது. நில அதிகாரமோ , போலீஸ அதிகாரமோ அற்ற , கிராமசபைக்கு ஒப்பான திட்டத்தை மாகாண சபை எனத் திணித்தது.
இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் தென் பகுதியெங்கும் ,இலங்கை அரசு நாட்டை இந்தியாவுக்கு விற்று விட்டதாக கூறி பெரும் உள்நாட்டுக் கலவரமே வெடித்தது.
ராஜிவ் காந்தியைக் கொள்வதற்கான திட்டம் கூட வகுக்கப்பட்டு ,ஒரு சிங்கள சிப்பாய் ,ராஜிவ் காந்தியை தலை மண்டையில் அடித்துக் கொள்ள முயற்சிக்க , மயிரிழையில் தப்பினார் ராஜிவ்.அப்போதைய இலங்கைப் பிரதமர் பிரேமதாச மற்றும் சிங்கள மக்களால் தேசபக்தன் அந்த சிங்கள சிப்பாய் புகழப்பட்டு ஒரே நாளில் கதாநாயகன் ஆனான். அதன் பிறகு பிரேமதாசா ஜனாதிபதியாக அந்த சிப்பாய் விடுதலை செய்யப்பட்டு, அரசால் மதிப்பளிக்கப் பட்டான். இவ்வாறு எல்லாம் நடந்தும் இந்திய அரசோ ராஜீவோ ஏன் இந்திய ஊடகங்களோ அனைத்துமே தொடர்ந்து இலங்கை அரசுக்கு சார்பாகவே செயற்பட்டன. நாம் காந்தி தேசம் , பெருந்தன்மை உள்ளவர்கள் எனத் சுய தம்பட்டம் அடித்தன.சிறிது கூட மனசாட்சி இல்லாது, நாம் தூண்டி விட்ட பிரச்சனை என்றும் பாராது தனது தேவை தீர்ந்ததும் ,இந்தியப் படைகளை அனுப்பி தானே தமிழ் மக்களை அடுக்கி கொன்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் செயற்பாட்டையே இந்திய அரசு செய்ய ஊடகங்கள் ஆதரித்து வெகுஜனக் கருத்தை தாமே உருவாக்கின.அப்போதெல்லாம் மௌனமாக இருந்த இவை அனைத்தும் ,ராஜிவ் கொல்லப்பட்டபின் ,தமது தனிப்பட்ட நலன்களை நிலை நாட்ட ராஜிவ் கொலையைப் பயன்படுத்தி மறைமுகுகமாக தமிழினப் படுகொலையில் பங்குகொண்டன.
1987ல் கைச்சாத்தான அந்த ஒப்பந்தை இன்றும் இந்தியா தனது நலன்களுக்காக பாதுகாத்து , அந்த அரைகுறை ஒப்பந்தில் ஈழ தமிழருக்காக இருந்த சில உரிமைகளை சிங்கள அரசுகள் காலத்துக்கு காலம் பர்ரித்த போது இறையாண்மை என்று சொல்லி வாளாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே ஆயுதம் வழங்குகிறோம் எனக் கூறி தமிழ் மக்கள் கொலையில் தானும் பங்கு கொண்டது. இப்போது ராணுவ ரீதியில் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டபின்னரும் , இலங்கை அரசை ஐ நா சபையில் தனது பரம வைரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து காப்பாற்று கின்றது , இலங்கை அரசை தமிழ் மக்களுக்கு நியாய தீர்வை வைக்குமாறு நாமும் வற்புறுத்த மாட்டோம் , யாரும் வற்புறுத்தவும் கூடாது என்று மார்தட்டி நிற்கின்றது.
இன்னமும் ராஜிவ் கொலையே இதற்கு காராணம் எனக்கூறும் புத்தி ஜீவிகளிடம் நான் கேட்பது இந்தக் கேள்விகளைத்தான்
1.இப்போது ராஜிவ் என்று துடிப்பவர்களே ,அவர் சிங்களவர்களால் தாக்கப் பட்டு தாக்கப் பட்டவன் தேசிய நாயகனாக உருவகப்படுத்தப்பட்டபோது எங்கே போனீர்கள் ?
2.இந்திய அரசு வைத்த திட்டத்தில் நில மற்றும் போலீஸ அதிகாரங்களை இலங்கை மறுத்தபோதும் இந்தியா தமிழர்களை வற்புறுத்தியதே அப்போது என்ன செய்தீர்கள்
3.இந்திய ராணுவம் தமிழர்களைக் கொன்று பாலியல் வல்லுறவுகளை நடத்தி சொத்துகளை சூறையாடியதே அப்போது எங்கிருந்தீர்கள்
4.இப்போது வாய் கிழிய ராஜிவ் என முழங்கும் தமிழக காங்கிரஸ் வீரர்களே அப்போது ராஜிவின் இறுதிக் கூட்டத்திற்கு வராமல் எங்கே போனீர்கள் ?
5.இப்போதுதான் புலிகள் இல்லையே ஏன் இன்னும் இலங்கை அரசை இந்தியா பாதுகாக்கிறது என்று இப்போது கூட நீங்கள் கேட்கவில்லையே ஏன் ?
6.விடுதலைப் புலிகள் தமிழர்களை சிறை பிடித்தாக கூறிய இந்திய அரசு இன்னும் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் சிங்கள அரசால் அடைத்து வைத்தது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன் என்று இனிமேலாது கேட்பீர்களா?இல்லை இன்னும் ராஜிவ் மரணம் தான் காரணம் எனக்கூறி தமிழினப் படுகொலைகளை நியாயப் படுத்துவீர்களா ?
எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை ,எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கவில்லை என்ற நிலையில் எது நடக்கப் போகின்றதோ , அதுவாவது நன்றாக நடக்க கூடாத என்பதே ஈழத் தமிழரின் இன்றைய ஏக்கம்.இந்த நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது வரை எதிரும் புதிராக இருந்த புலிகளின் சர்வதேச செயலகமும் புலனாய்வுத் துறையும் ஒன்றாக இயங்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலெழுந்து வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" பற்றிய ஒரு குழப்பமான மனநிலையே காணபடுகின்றது.
இலங்கையில் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் புலிகளும் இல்லாத நிலையில் இது தம்மை எவ்வாறு பாதிக்கப் போகின்றது என்ற அச்சமுற்ற வினாக் குறியே எழுந்து நிற்கின்றது. சிங்கள கொலை வெறி அரசால் முள்ளுக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட
அந்த மூன்று லட்சம் உறவுகளே வெளியுலக நடப்புகள் எதுவுமறியாது ஆண்களானால், எப்போது கடத்தப் பட்டு கொலை செய்யபடுவோமோ என்றும் பெண்களானால், இதை விட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுவோமோ என்ற சூழ்நிலையில் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில்,இது அவர்களின் இருப்பைப் பாதிக்கும் என்ற நிலை இல்லாதபோதும் இது எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்ற எண்ண மோதல்களே தற்போது காணபடுகின்றது.
இவ்வாறான நிலையில் எமது மாற்றுக்கருத்தாளர்கள் தமது வக்கிரத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.மகன் இறந்தாலும் பரவாயில்லை,மருமகள் பொட்டிழக்க வேண்டும் என்ற முது மொழியை மனதில் ஒரு பேரு மூச்சோடு நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.இந்த நிலையில் ஏன் தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் அவசியம் என்று பார்தால் அது ஒரு வரலாற்றுத் தேவை என்றே புரிந்து கொள்ளலாம். இதுவரை காலமும் போராட்டத்தை முன்னெடுத்து வந்த புலிகள் இயக்கம் முற்றாக இராணுவ ரீதியில் அழிக்கப் பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு அவசியம்.இன்று இலங்கையில் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்ட அந்த மூன்று லட்சம் மக்களை மீட்டு சொந்த இடத்தில் குடியமர்த்தவும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து உலகளவில் குரல் கொடுக்க எம்முள் ஒற்றுமை அவசியம். அதனைக் செய்வதற்கு ஒரு அமைப்பு அவசியம்.
வெறுமனே ஒரு அமைப்பாக மட்டும் இல்லாது நாடு கடந்த அரசாங்கம் என்ற பெயரில் , உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை ஜனநாயக ரீதியில் ஒன்றிணைக்கும்போது , ஓரளவேனும் உலகநாடுகளின் கவனத்தை எம்மேல் திருப்பி , எமது மக்களின் இருப்பை உறுதிபடுத்த முடியும். அவ்வாறு அடிப்படை உரிமைகளை உறுதிப் படுத்தியவாறு எமது போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும். ராஜிவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி தனது பிராந்திய நலனுக்காக ஈழத் தமிழின ஒழிப்பில் முக்கிய பங்காற்றிய இந்தியா கூட ,இந்த அமைப்புக்கு வேண்டா வெறுப்பாக வேண்டியும் உதவ வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு சிங்கள இனவெறி அரசின் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான நெருக்கமும் ஒரு காரணமாக அமையும்.
இந்த நிலையில் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பின்வருவனவற்றை கருத்திற் கொள்ளவேண்டும்.
1. ஜனாயக ரீதியில் பிரதிநிதிகளை வாக்கெடுப்பு மூலம் அந்தெந்த புலம் பெயர்ந்த நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தல்
2. இவ்வாறு தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் மூலம் ஒரு செயல் குழுவை உருவாக்க வேண்டும்.
3. இந்த தேர்தல்களில் , மாற்றுக் கருத்துள்ள குழுக்களையும் இணைத்து மக்களிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை விடவேண்டும்.
4. சேகரிக்கும் நிதிகள் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
5. இனவெறி, சாதிவெறி, மதவாதம் , பிரதேசவாதம் என்பவற்றை நிராகரித்து , முஸ்லிம் மற்றும் மலையக மக்களையும் அரவணைக்க வேண்டும்.
இதைபோல மேலும் பல நல்ல அம்சங்கள் எமது மக்களுக்கு தோன்றலாம்.அவற்றை தேர்தெடுத்து கடைபிடித்தால் , உலக நாடுகளின் நன்மதிப்பை பெறுவதோடு , எமது உரிமைகளையும் விரைவாக பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒவ்வொரு ஈழத் தமிழனதும் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அவசியம். அவ்வாறு அமையும் பட்சத்தில் , வெற்றி சாத்தியமானதுதான் சந்தேகமே வேண்டாம்.
தலைப்பை பார்த்தவுடன் , என்னடா மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறானே என்று எண்ணாதீர்கள். அரை நாள் உண்ணாவிரதமிருந்து, அதை நேரடியாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பி , போர் நிறுத்தம் ஏற்ப்பட்டது எனக் கூறி மதிய உணவுக்கு வீட்டுக்கு நடையை கட்டும் ஆத்மாக்கள் மற்றும் அதை நம்பி புளாங்கிதம் அடையும் புத்திசாலிகள் வாழும் காலத்தில் இது மட்டும் ஏன் சரியாக இருக்க கூடாது என வரலாற்று ரீதியாக ஆராய்வோம் .
முதலில் இலங்கை அணி , 1996 உலகக் கிண்ணம் வென்றபோது போது இருந்த சூழ்நிலைகள் பாப்போம். யாழ் நகரம் சிங்களப் படைகளால் கைப்பற்றப் பட்டு , தமிழர்களின் பண்டைக் கால தலைநகரை கைப்பற்றி விட்டோம் என்று சிங்கள இனவெறி பெரும்பான்மை சிங்களரிடம் குடியிருந்த காலம் அது. கொழும்பு நகரெங்கும் தமிழர்கள் கடத்தப்பட்டு , வாவிகளில் பிணமாக மிதந்த காலம். இலங்கை ராணுவ அமைச்சர் , யாழ்ப்பாணத்தை வென்ற ஒரு சிங்கள மண்ணின் பெயரால் அழைக்கப்பட்டு , சிங்கள இனவெறி முதன் முறையாக அனைத்து சிங்கள மக்களையும் அணைத்துக்கொண்ட ஆண்டுதான் 1996.
அத்துடன் ரனதூங்கவின் தலைமையின் கீழ் , அரவிந்த , ஜெயசூரிய, களுவிதாரண, குருசிங்க, திலகரத்ன, மகாநாம, தர்மசேன, வாஸ், முரளிதரன் என அனைவருமே புதிய புதிய உத்திகளுடன் தம்மை நிருபித்து கிண்ணத்தை வென்றனர். சிங்களம் உலகத்தை வென்ற நாளாக அதிலும் இந்தியாவை மட்டம் தட்டிய திருப்தியில் தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது. யுத்தத்தில் வெற்றி , கிரிக்கட்டில் வெற்றி , எதிலும் வெற்றி என முழக்கமே எங்கும் எதிரொலித்தது.
இப்போது இந்த உலகக் கிண்ணத்தைப் பார்த்தோமானால் , யுத்த வெற்றியைப் பற்றியோ , சிங்கள இனவெறி பற்றியோ எவருக்கும் விளக்கத் தேவையில்லை. கிரிக்கட்டைப் பார்த்தல் , சங்ககாரவின் தலைமையின் கீழ் ( இவரும் ரனதூங்க போல பண்டைய சிங்கள தலைநகர் கண்டியை சேர்ந்தவர் ) ஜெயவர்த்தன, வித்தியாசமாக துடுப்பாடும் டில்ஷான், அனுபவமிக்க ஜெயசூரிய மற்றும் முரளி , அதிசய பந்து வீச்சாளர் மென்டிஸ் மற்றும் சாதிக்கத் துடிக்கும் இளைய வீரர்கள் என காணபடுகின்றது இலங்கை .
விளையாட்டில் அரசியல் எதுக்கு என்று அரசியல் புரியாத சில புத்திஜீவிகள் சொல்லுவார்கள். ஆனால் விளையாடே அரசியல் என்பது இன்றைய உலக நியதி. போலி தேச பக்தர்கள் தமது தாய் நாட்டுப் பற்றிக் காட்டி , முடியுமானால் தமது எதிரணியை உதைக்க முயலும் காலம் நமது காலம். இலங்கை இந்த உலகக் கிண்ணத்தில் வெற்றி பெற்றால் , தமிழின அழிப்பை கடவுளே பாராட்டுகின்றார் என்று மக்களுக்கு போதிக்க ஏராளமான அரசியல் வாதிகளும் புத்த சாமியார்களும் காத்திருக்கின்றனர். இந்தியா கூட போரை வென்று இலங்கை ஒன்றுபட்டதால் கிடைத்த வெற்றி சொல்லக்கூடும்.
இந்த வெற்றி மட்டும் கிடைத்தால் அது, முள்ளுக் கம்பிகளுக்குள்ளே சிறைப்பட்டு , அடுத்த வேளை உணவுக்கும் நீருக்கும் , அடிமைப் படுதியவனின் , உற்றார் உறவினரைக் கொன்று குவித்தவனின் கையை எதிர்பார்த்து ஏங்கி , எனக்கொரு விடியல் வராதா எனத்தவிக்கும் எமது உறவுகளின் துன்பங்களை மறைக்கவே உதவப் போகின்றது.தமது நாடு அணியின் வெற்றி தமது இருப்பை கேள்விக்குள்ளாகும் எனப் பயந்து நாட்களை கழிக்கும் இன்றைய ஈழத் தமிழரின் நிலை உலகில் யாருக்கும் வரக் கூடாது.
காந்தி உண்ணாவிரதமிருந்துதான், பிரித்தானியாவிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக இன்னும் பல அறிவுஜீவிகள் திருவாய் மலர்ந்து வருகின்றனர். இந்தக் கதை அனைத்து மக்களுக்கும் தெரிந்ததுதான். இப்போது நாம் ஒரு புதுக்கதை நம்மில் பலருக்கு தெரியாத கதையைப் பார்க்கலாம். இந்த கதையின் நாயகன் பெயர் , பாந்தி அத்துடன் அடிகளோ ஜீ என்றோ உங்க விருப்பத்துக்கு ஏற்றமாதிரி சேர்த்துக்கொள்ளலாம். இவர் போராடியது ஹிந்தியா எனும் நாட்டுக்கு எதிராக , அமிழகம் எனும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க என்று வைத்துக் கொள்ளலாம்.
காந்தியின் உண்ணாவிரதக் கதைக்கு ஒத்த கதை என்றதும் , யாரும் நம்ம நாயகன் பாந்தி , காந்தி மாதிரி குணவியல்பு கொண்டவன் என்றோ , ஹிந்தியா பிரித்தானியா மாதிரி என்றோ கற்பனை செய்யக் கூடாது. அப்போ எப்படின்னு நீங்க கேட்கலாம். சுருக்கமா சொன்னா , நம்ம பாந்தி , அந்த காந்தியை விட உண்மையிலேயே நல்லவன். ஆனா இந்த ஹிந்தியாவோ , அந்த பிரித்தானியாவை விட ரொம்ப கெட்ட தேசம். சரி இவ்வளவு விளக்கம் போதும் நாம் இப்போது கதைக்குப் போவோம்.
இந்தியா காந்தியை தலைவனாக ஏற்றுக்கொண்ட மாதிரி , அமிழக மக்களில் பெரும்பாலோனோர் நம்ம பாந்தியை ஏற்றுக்கொள்ள , பாந்தியும் , உண்ணாவிரதம் , உப்பு அள்ளுதல் எனக் கலக்க ஆரம்பித்து விட்டார். இதப் பார்த்து ஹிந்தியாவுகோ ஒரே ஆச்சரியம் நம்ம பிரித்தானியா என நினைத்து காமடி கீமடி இந்த பாந்தி பன்றாரோ என ஒரே குழப்பம். இதில ஒரு விடயம் எல்லாருக்கும் சொல்லணும் , இந்த ஹிந்தியா வந்து , போனியா என்னும் பெண்ணால் , பண மோகன் சங்கு என்பவரை வந்து ஆளப் பட்டது. அவரும் அமிழக விடயங்களை கவனிக்க , நாறவாயன் மற்றும் சவ பங்கர் கூனன் என இரண்டு பேரை வைத்திருந்தார். இந்த இரண்டு பெரும் அடிகடி அமிழகம் போய் வந்து , கைப்புள்ள கணக்கா , சொந்த ஊருல வந்து பச்சைப் பொய்யா சொல்ல அமிழக மக்களின் இனத்தை சேர்ந்த , ஹிந்தியாவில் வாழும் மற்றவர்களும் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடுவார்கள்.இது ஒரு ஒரு நல்ல நகைச்சுவையாக ஹிந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் மற்றைய இன மக்களுக்கும் அமையும்.
என்ன செய்யலாம் எனத் தலையைப் பிய்த்துக் கொண்ட போனியா , பண மோகன் சங்கு , நாறவாயன் மற்றும் சவ சங்கர் கூனன் சில முடிவுகளுக்கு வநது அவற்றை அமுல் படுத்த தொடங்கினர். இந்த கதையில இன்னும் சில காமடியன்கள் , தண்டநிதி , மாயலலித்தா என நீளும், ஆனா அப்புறம் எப்படி இந்த கதையை கொஞ்சம் சீரியசா முடிகிறதாம் . அதனால அதப் ஒரு முழு நீள நகைச்சுவை சித்திரமா பிறகு பாப்போம். இப்போ கதைக்கு திரும்புவோம்.
முதலில் அதே இனத்தை சேர்ந்த தண்ட நிதியை தூண்டி விட்டு , பாந்தி என்னுடய நண்பன் ஆனால் அப்புறமா நான் அப்படி சொல்லவேயில்லை நான் சொல்றது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் பல்டி அடிக்க செய்தனர் . இதில ஒரு விடயம் எல்லாருக்கும் தெரியனும் , இந்த தண்ட நிதி , தான் உலக அமிழ் மக்களின் தலைவர் எனத் தனக்கு தானே பட்டம் சூடிக் கொண்டவர். அவருக்கு பாந்தி கதநாயகனாவது வேப்பம் காயாக கசந்தது. அதோட மாயலலித்தாவுக்கோ , அமிழ் மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் பிடிக்காது அப்படி ஒரு காரக்டர் அவங்க. அவங்க ஒரு பெரிய தத்துவ முத்த உதிர்தாங்க , " போர் என்றால் மக்கள் சாவது இயல்பு" அப்படின்னு. இப்படியே இவங்க அரசியல் பண்ணி , ஹிந்தியாவுலுள்ள அமிழ் இன மக்களின் இன உணர்வை திசை திருப்பிக் கொண்டிருந்தாங்க. ஆனால் பாந்தியோ அமிழ் இன மக்களின் ஒப்பற்ற தலைவனாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வந்தார்.
போனியா அன் கோ ரொம்ப கடுபடைந்து விட்டனர். சரி , பாந்தி சுக போக வாழ்வு வாழ்கின்றார் என ஒரு கட்டு கதையைப் பரப்பி பார்த்தனர். ஒண்ணுமே வேலைக்காகல. சரி பிரிடிஷ் அரசு போல விட்டுப் பிடிக்கலாம் என்றா , அந்த காந்தி போல சொந்த மக்களுக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்கின்ற ஆளும் இந்த பாந்தி கிடையாது. அதே நேரம் ஹிந்தியாவுக்கு ஒரு விடயம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அந்த காந்தி, அவ்வளவு வஞ்சித்தே , மக்கள் அப்படி நேசிச்சாங்க. இப்படியே விட்டால் பாந்தி , தன்னிகரற்ற தலைவனாகி, உறங்கிக் கொண்டிருக்கும் ஹிந்திய அமிழ் மக்கள் உரிமை கேட்பார்களோ என்று ஒரே கலக்கம். இந்த ஹிந்திய அமிழ் மக்கள் எப்படின்னா , தம் பகுதியை சுத்தி இருக்கும் அனைவரும் சேர்ந்து வீடு கட்டி அடித்தாலும் கண்டுக்கவே மாட்டார்கள். இத குண இயல்பை பாந்தி மாத்திடுவாரோ என பயந்தே போய்ட்டாங்க. சரி நம்ம அரசியல காட்டலாம் என நினைச்சாங்க. பாதியை மதம் மற்றும் ஜாதி கூறி ஒரே பிரச்சாரம் பண்ணினாங்க. பாந்தி ஒரு பயங்கரவாதி என்னாங்க. ஹ்ம்ம் அமிழ் மக்கள் ஆசையே வில்லை. சரி என்ன பண்ணலாம் என யோசிச்சாங்க. நம்ம பாந்தி தான் அஹிம்சை வாதியாசே , பாதுகாப்புக்கு யாருமே கிடையாது. தமது குண்டர் படையை அனுப்பி நள்ளிரவில் போட்டு தள்ளி விட்டு , சொத்து மோதலில் பாந்தியை சொந்த கட்சிக் காரனே கொன்றதாக கூறி , பாந்தி கட்சிக்காரன் எல்லாரையும் சிறையில அடைச்சாங்க. குழம்பிப் பொய் இருந்த மக்கள் மத்தியில , பாந்தியைப் பற்றிய பல்வேறு கட்டுக் கதைகளை பரப்பினாங்க. இலங்கையில் போர் நிறுத்தம் என உலகத்தில் குறுகிய நேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த கருணாநிதி அறிவிக்க எப்படி அவரது குடும்ப மீடியா அதை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றதோ அப்படி அதே மாதிரி என்னு நீங்க வைச்சுக்கலாம்.
எல்லாம் முடிஞ்சப்புறம் , போனியா அன் கோ கூடிப் பேசினாங்க. அவங்க எல்லாருக்குமே ஒரே ஒரு ஆச்சரியம் , அந்த பிரிடிஷ் காரன் ரொம்ப கேனையனா இருப்பான் போல இருக்கே . மீடியாவினால் சூழப்பட்ட இந்த நேரத்திலேயே , நாம இப்படி ஒரு கொலை பண்ணி அத அப்படியே மறைத்து விட்டோம். ஆனா பிரிடிஷ் காரன் அந்த காந்தியை ஒண்ணுமே பண்ணாம பூப் பறிச்சுக் கொண்டா இருந்தான் எனப் பேசி தமது ராஜ தந்திரத்தை மெச்சிகொண்டனர் தன்னயே நக்கி இன்புறும் நாய்கள் போல. இதில என்ன பெரிய்ய ஜோக் என்றால் , இப்பவும் சில புத்திசாலிகள் , காந்தி வழியே நல்லது என்னு என்று சொல்லீட்டு இருக்காங்க எனக் கூறி போனியா குலுங்கி குலுங்கி சிரிக்க நம்ப கதை சுபமே முடிவடையுது.
குறிப்பு : முன்னரே குறிப்பிட்டது போல இது ஒரு கதையே . யாரும் இதை நிகழ் காலச் சம்பவங்களுக்கு முடிச்சு போட்டு என்னை திட்டக் கிளம்பக் கூடாது.படிச்சமா சிரிச்சமா என்னு போய்க்கினே இருக்கணும்.மகிழ்ச்சியை வேணும்னா பின்னுட்டமா பகிர்ந்துகோங்க :-)
நான் சொல்லித்தான் , தமிழ் அரங்கம் ரயாகரன் பற்றி உங்களுக்குகெல்லாம் தெரிய வேண்டுமென்பது கிடையாது. அவரே தமிழில் இது போல ஒரு இணைய தளம் கிடையாது என்று சொல்லிவிட்டார் . உண்மைதான். மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்ட பக்கங்கள். ஆயிரக் கணக்கான கட்டுரைகள் , நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், ஒரு ஆவணக் காட்சியகத்தையே தன்னுள் கொண்டிருக்கும் இணைய தளம். எனது நண்பன் ஒருவன் சொல்லுவான் , பாசிசம் என்று ரயாகரன் தொடங்கினார் என்றால் , மடை திறந்த வெள்ளம் போல எழுதிக் கொட்டிவிடுவார் என்று.
தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட , தினமும் வருகை தரும் ஒரு சிறந்த வலைப்பக்கம். மாற்றுக்கருத்து எனும் அடை மொழியை தூக்கிப் பிடிப்போரில் , எனக்கு ரயாகரனை பிடிக்கும். என்னதான் தனி இயக்கத்தில் இருந்து , புலிகளுக்கு எதிராக பல்கலைகழகத்தில் போராட்டம் நடத்தி , புலிகளால் கைதும் , ரயாகரன் பார்வையில் கடத்தப்பட்டும் இருந்தாலும் , பேரினவாத சிங்கள கொலை வெறி அரசின் அராஜகங்களை , வெளிக்கொணர்வதில் முழு மூச்சாக உள்ளவர். பாசிசம் என்று எழுதி எழுதி பழக்கப்பட்டதாலோ என்னவோ , இப்போது பாசிச மகிந்த என்றே எழுதி வருபவர்.
வன்னியில் இடம் பெற்ற பொது மக்கள் படு கொலையை , பெண் போராளிகளின் இறந்த உடல்களின் மேல் சிங்கள வெறி நாய்கள் நடத்திய கோரத்தாண்டவங்களை , உடனுக்குடன் உலகுக்கு வெளிபடுதியவர். வன்னிப் பேரவலம் நடந்த பின் அடுத்த ஓரிரு நாட்களில் அவர் எழுதிய அல்லது பிரசுரித்த கட்டுரைகள் எல்லாம் , ஒரு உண்மையான நடுநிலமையான மாற்றுக் கருத்தாளராக அவரை வெளிபடுதியவை. ஆனால் அவர் பற்றிய இந்த தற்காலிக எண்ணக் கருக்கள் எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் அவராலேயே கருக் கலைப்பு செய்யப்பட்டன.
தனது எழுத்துகள் , சிங்களப் பேரினவாதத்துக்கு துணை போனாலும் பரவாயில்லை , புலிகள் பற்றிய மக்களின் பார்வை அழிந்தொழிந்து போகவேண்டும் எனக் கொக்கரிகின்றார். நீங்கள் ஏன் ஈழம் சென்று போராடக் கூடாது எனக்கேட்டால் , அதற்கான வழிகள் ஏற்படின் அதைச் செய்வோம் என சலாப்புகின்றார்.
தோழர் ரயாகரன் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், ஆயிரம் விமர்சனங்கள் இருந்ததாலும் , புலிகளின் தலைவரும் புலிகளும் , பெரும்பான்மையான ஈழத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். நடுநிலையாக இருந்த தமிழர்கள் கூட , வன்னிப் பேரவலத்தின் பின்னர் , புலி ஆதரவுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் புலிகளுக்கு எதிராக இருப்பவர்கள் யார் எனின் , புலிகளால் தனிப்பட்ட ரீதியில் பாதிப்பு அடைந்தவரே எஞ்சுகின்றனர் . இந்த நிலையில் உங்களின் இந்த மாதிரி கட்டுரைகளும் மீள்பதிப்புகளும் , மக்களிடமிருந்து உங்களை மேலும் அன்னியப் படுத்தவே செய்யும். நான் உங்கள் தனிப்பட்ட காயங்களை புரிந்து கொள்கின்றேன் . புலிகளால் பாதிக்கப்பட்ட கோபத்தில் , தமிழின தூரோகியாக மாறி , சிங்கள மற்றும் இந்திய அரசுக்களின் அடிவருடிகளாக மாறாமல் , தமிழர் மீதான இனப் படுகொலைகளை எதிர்த்து நிற்கின்றீர்கள். அதை நான் மதிக்கிறேன். போற்றுகின்றேன் . அதே நேரத்தில் , உங்ககளுக்கு நீங்களே சுய விளம்பரம் செய்வது , இவை அனைத்தையும் மறைத்துவிடும் .
மக்களுக்காக போராட போகும் போது நாம் தாம் அதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர , "அதற்கான வழிகள் ஏற்படின் செய்வோம்" என இருத்தல் , ஒரு உண்மையான மக்கள் போராளிக்கு இலக்கணமல்ல.
மீண்டும் சொல்கின்றேன் , நீங்கள் ஒரு தமிழ் உலகம் அறிந்த எழுத்தாளர் மற்றும் தமிழ் மக்களுக்காக இன ரீதியிலும் , சமுக ரீதியிலும் மற்றும் கலாசார ரீதியிலும் போராட்டம் நடத்தியவர் , நடத்துபவர். 1987 ல் இந்திய படைகளுடன் மீள் பிரசன்னமான , தமிழ் ஆயுதக் குழுக்கள் , எவ்வாறு கொஞ்ச நஞ்சமிருந்த தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதறடிதனவோ, அவ்வாறு இல்லாது , நீங்கள் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க உதவவேண்டும். உங்கள் எழுத்தாற்றல், அரசியல் மற்றும் சமூகப் பார்வை நீங்களும் நாமும் நன்கு அறிந்தவை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் இனியும் எமக்கு கிடைக்கப் போவதில்லை, இது இறுதி சந்தர்ப்பமும் கூட. உங்களால் முடியும் தோழர் ரயாகரன். தயவு செய்து நடத்திக் காட்டுங்கள்.
(மேலதிக பத்திகள் இணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பதிப்பு)
புலிகளின் தலைவரின் வீர மரணம் பற்றி இன்னுமே எவராலும் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை, அந்த இருண்ட இறுதிக் கணங்கள் புலிகளின் தலைவருக்கும் இன்னும் சிலருக்குமே வெளிச்சம். அதை மக்களுக்கு வெளிக்காட்ட அந்த சக்திகளும் தயாரில்லை .இந்த நிலையில் பல்வேறு சக்திகள் பல கட்டுக் கதைகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி தமிழ் உணர்வாளர்களை மனம் தளர வைக்க முயற்சித்து வருகின்றன.
முதலில் தலைவர் உயிருடனுள்ளதாக அறிவித்த புலிகளின் அனைத்துலக செயலகம், தற்போது வீரசாவடைந்தாக துக்கம் அனுஷ்டிகின்றது. தமிழக தமிழின உணர்வாளர்களான நெடுமாறனும் வைகோவும் , "இது தவறான செய்தி , தலைவர் வருவார்" என்கின்றனர். பத்மநாதனை கண்டிக்கின்றனர். தமிழின விரோதிகள் எதிர்பார்த்தும் இதைத்தான். தலைவரின் மரணம் , ஈழ மற்றும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அத்துடன் இனிவரும் புலிகளின் தலைமை , இந்த அனுதாபத்தை பயன் படுத்தி இது வரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் நடுநிலைமை வகித்தவர்களையும், ஒன்று திரட்டி விடுமோ என்ற அச்சமும் இந்த தமிழின விரோதிகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளிடன் உள்ளது. எனவே தலைவர் மரணத்தை ஒரு வதந்தியாக வைத்திருப்பது , இவர்களுக்கு சாதகமே. அத்துடன் புலித் தலைமை இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி , இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கூட , ஈழ தமிழரை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தவும் மேலை நாடுகளை பாராமுகமாக வைத்திருக்கவும் முடியும்.
இந்த நிலையில் இதுவரை புலித்தலைமையை விமர்சித்து , புலிகளால் தான் எல்லாமே என்று கண்ணை மூடிக்கொண்டு அறிக்கை விட்டு தம்மை தாமே மாற்றுக் கருத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்ளுபவர்கள் , இன்று , புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளரை , தூரோகி என்றும் காட்டிக் கொடுத்தவர் என்றும் கூறத் தலைப் பட்டிருக்கின்றனர் . இதுவரை காலம் அவர்கள் சுமத்திய குற்ற சாட்டுக்களான, தனது பிள்ளைகளை யுத்தத்தில் ஈடுபடுத்த வில்லை , யுத்த வலயத்தை விட்டு ஓடிவிட்டார் போன்றவை பொய்யாக , என்ன செய்வதறியாது திகைத்துபோய் நிக்கின்றனர், மற்றும் அவர்களை பொறுத்தவரை புலித் தலைமை மரணமடைந்து விட்டது இனியும் எதிர்த்து அறிக்கை விட்டால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனக் கண்டு கொண்டனர் .
இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் எனியும் ஒரு வலிமையான தமிழ் தலைமை வர அனுமதிக்க போவதில்லை. தமக்கும் அந்த இடத்தை நிரப்ப ஆளுமை கிடையாது என்றும் தெரியும். அத்துடன் வெறுமனே கண்டன அறிக்கை விட்டு பழகிப் போன இவர்கள் இன்று யாரை எதிர்ப்பது என்று தெரியாது புலம்பி தமது அடுத்த இலக்காக தெரிவு செய்திருப்பது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் பத்மநாதனை.
நான் இங்கே புலித்தலைவர் இறந்து விட்டதாகவோ , பத்மனாதனுக்காக வாதிடவோ வரவில்லை. எனது ஆதங்கமெல்லாம் , தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய இந்த தருணத்தில் அவர்களை குழப்பத்தி ஆழ்த்தி பேரினவாதிகளுக்கு துணை போகின்றனரே இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் என்பது மட்டுமே. புலிகள் மட்டும் ஒதுங்கிக் கொள்ளட்டும் , தமிழ் மக்களுக்கு நாம் விடுதலை பெற்று தருவோம் என்றெல்லாம் முழக்கமிட்டனர் இந்த மாமணிகள். இப்போதுதான் அந்த சூழ்நிலை வந்துவிட்டதே , ஈழத்துக்கு போய் உதவுவார்கள் என்று பார்த்தால் , எனி யாரை எதிர்த்து அறிக்கை விடலாம் என்று சிந்திகின்றன்ர் இந்த புத்தி ஜீவிகள்.
இதில் ஒரு புகழ் பெற்ற (ஏ) மாற்றுக் கருத்தாளர், இனியும் தான் இலங்கை போக முடியாது , ஏனென்றால் இலங்கை அரசின் அச்சுறுத்தல் உள்ளது என்கின்றார். இலங்கை அரசையும் யாரும் வந்து அழித்த பின்தான் போவாரோ ?.இன்னும் சில மாற்றுக் கருத்தாளர்கள் , எப்போதும் பாசிசம் சார்ந்த எதிரியை தேடுபவர்கள். புலித்தலைமை இருக்கும் வரை , பாசிசப் புலிகள் என கர்சிதவர்கள் , இப்போது பாசிஸ்ட் மகிந்த என உறுமுகின்றனர் . இவர்களுக்கு பாசிசம் என்ற வார்த்தையை கற்றுக் கொடுத்த ஆசிரியரைப் பிடித்து வாங்கு வாங்கவேண்டும் ஏனையா இவர்களுக்கு போய் இதை கற்றுக் கொடுத்து , ஒரு சமுதாயத்தையே கடுப்படித்த பாவத்துக்கு ஆளாகி விட்டீர்களே என்று.
மாற்றுக் கருத்துகள் ஜனநாயகத்துக்கு அவசியம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. ஆனால் எதிர்ப்பு அரசியல் நடத்தியே பழகிபோய் , தன்னை வித்தியாசப் படுத்திக் காட்டுவதற்காக , இவ்வாறான் கருத்துகளை வெளிபடுத்துவது ஜனநாயகத்துக்கு எந்த வழியிலும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தமாட்டாது. மக்களே தயவு செய்து , இந்த (ஏ) மாற்று காரர்களின் பேச்சை நம்பி பேரினவாதத்துக்கு சோரம் போய்விடாதீர்கள். இந்த போராட்டத்தில் நாம் உண்மையான மாற்றுக் கருத்தாளர்களை உருவாக்காது , எட்டப்பர்களை மட்டுமே உண்டாக்கி உள்ளோம் .இதற்கு என்ன காரணம் என்று விவாதம் செய்து ஒருவர் மேல் ஒருவர் பழியை போடாது, எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்.
பயங்கரவாதம் என்னும் சொல்லுக்கு வரைவிலக்கணம் தேடினால், பின்வருவனவற்றை கண்டுகொள்ளலாம். வன்முறையையும பயமுறுத்தல்களையும் கைக்கொண்டு தமது அரசியல் இலக்கை அடைய முயற்சித்தல். பயங்கரவாதத்தால் நாடு முழுவதும் அச்சம் நிலவும் சூழ்நிலை உருவாக்கப்படும். மேலும் பயங்கரவாதமானது நாட்டை அரசாள்வதற்கும் அல்லது அரசாங்கத்தை எதிர்ப்பதற்கும் பயன்படும். நாம் மேற்கண்ட இந்த வரைவிலக்கணத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தையும் இலகுவாக பயங்கரவாதம் என முத்திரை குத்திவிட முடியும். ஏகாபத்திய நாடுகள் தமது சொந்த நலன்களுக்கேற்ப இவ்வாறு இயக்கங்களை தாமோ மற்றும் தமது கைப்பாவையான ஐநா சபையைக்கொண்டோ தடை செய்துவிட முடியும். இங்கே அவர்களது அரசியல் இலக்கு என்ன என்பதோ எதற்காக போராடினார்கள் என்பதோ கருத்தில் கொள்ளப்படமாட்டாது.
அதேநேரத்தில் தம்மை ஜனநாயக நாடுகள் என்றும் நாகரிகவாதிகள் என்றெல்லாம் அலைத்துக்கொளும் இந்த நாடுகள் , அந்த விடுதலைபோராட்டத்தை அடக்க , அந்த நாடுகள் செய்யும் பயங்கரவாதத்தை பற்றி தத்தமது பொருளாதார நலன்களுகேற்ப மென்மையான வார்த்தைகளில் கண்டிப்பதுடன் நின்று விடுகின்றன.இதற்கு நேரில் வாழும் உதாரணம் இலங்கையும் அதன் இனவெறி அரசும்.
இலங்கையில் ராஜபக்ச பதவியேற்றவுடன் அறிவித்த முதல் செய்தி , புலிகளுடன் வடக்கு கிழக்கு மக்களின் நலனுக்காக செய்து கொள்ளப்பட்ட சுனாமி கட்டமைப்பு ரத்து என்பதே ஆகும். இதன் மூலம் ஒரு நிர்வாக பரவலாக்கத்திற்கே தான் தயாரில்லை என்னிடம் எந்தவொரு அரசியல் அதிகார பரவலாக்கத்தையும் எதிபாராதீர்கள் எனக்காட்டினான். ஆயுதங்களை தாரளமாக இந்தியா, சீனா , பாகிஸ்தான் மற்றும் ரஷ்யாவிடமிருந்து வாங்கிக்குவித்தான். இந்த நாடுகளும் அவனுக்கு தத்தமது பொருளாதார நலன் சார்ந்து உதவ முன்வந்தன. இலங்கையில் புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் எனக்கண்டு கொள்ளப்பட்டோர்களை வெள்ளை வானில் கடத்தி கொலை செய்தான். சில நடுநிலையான சிங்களவர்களை புலி ஆதரவாளர்கள் என சிறையில் அடைத்தான். நடுநிலையான ஊடகவியலாளர்களை சிறையில் அடைத்தும் ராணுவ புலனாய்வாளர்களை மற்றும் தமிழ் எட்டபர்களான கருணா , டக்ளஸ் மற்றும் புளொட் எனப்படும் கூலிபடைகளை வைத்து போட்டு தள்ளினான். அவன் எதிர்பார்த்த " அச்சம் தரும் சூழ்நிலை " உருவானது. அதன் பின்னர் தமிழ் தேசியம் பேசிய பாராளுமன்ற உறுபினர்களை குறிவைத்து சிலரை கொன்றும் பலரை நாட்டை விட்டும் வெளியேற செய்தான். இதே நேரத்தில் இந்து ராம் போன்ற தமிழின விரோதிகளை அழைத்து " ஸ்ரீ லங்கா ரத்னா" எனும் பட்டம் கொடுத்து நன்கு "கவனித்து" தமிழ் படுகொலைகளை தமிழ் நாட்டில் மறைக்க முன்னேற்பாடுகளை செய்து கொண்டான்.
அடுத்த கட்டமாக ஏற்கனவே பயங்கர வாத ராணுவமாக இருந்த ஸ்ரீ லங்கா ராணுவத்தை , கொலை வெறி ராணுவமாக கட்டி எழுப்பினான். மனித உரிமை என்பதையே மறந்து விடுங்கள் எனத் தைரியமூட்டினான். தமிழ் பிரதேசங்கள் மேல் பொருளாதார தடைகளை விதித்து உணவையும் மருந்தையும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான். பசிப்பிணியால் வாடிய மக்கள் மருந்தின்றி போக நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்.
கப்பல் கப்பலாக ஆயுதங்களை இறக்கி இந்தியா , பாகிஸ்தான் , சீனா மற்றும் ரஷ்யாவுடன் ராணுவ உடன்படிக்கைகளை செய்து கொண்டான். போரும் ஆரம்பித்தது. இந்திய ராடார்கள் துணையுடன் , அமெரிக்க செய்மதிகள் படம் பிடித்த இலக்குகளினை , பாகிஸ்தான் விமானிகளின் மேற்பார்வையில் , சீனக் குண்டுகளை கொத்துகொத்தாக இலங்கை விமானப்படை தமிழ் மக்கள் மீதும் புலிகள் மேலும் வீசிக் கொன்றது. இந்திய கடற்படை உதவியுடன் , புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. மேலை நாடுகள் புலிகளின் நிதி மூலத்தை தடை செய்தன.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழகம் கொந்தளிக்க , மனித சங்கிலி மற்றும் தந்தியடிப்பு எனப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டது. தம்மை தாமே வேள்வி தீயில் தமிழுணர்வாளர்கள் எரிதுக்கொண்டனர். கடையடைப்புகள் மூலம் தம்மைத்தாமே வருத்தி கொண்டனர். காந்தி இருந்த உண்ணாவிரதம் கூட இருந்து பார்த்தனர் . காந்திதேசமே அலட்சியப் படுத்தியது.
முழு உலகத்துக்கும் எதிராக போராடிய புலிகள் இயக்கம் 3 வருடங்களின் பின்னர் ஒரு நயவஞ்சகமான காட்டிகொடுப்புடன் முற்றுமுழுதாக ராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டது. மக்களின் உரிமையை பெற்றுத் தராத இலங்கை போன்ற பயங்கர வாத நாடுகள் இருக்கும் வரை , உரிமைப் போர் என்பது வேறு வேறு களங்களில் வேறு வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நேற்று ராஜபக்ச விட்ட அறிக்கையில் , இந்தியாவை , சோனியா காந்தியை , மன்மோகன் சிங்கை மற்றும் தமிழக மக்களை பெரிதாக பாராட்டி அறிக்கை விட்டிருந்தான். இந்தியாவின் ஆதரவு தனக்கு மிகவும் நிம்மதி அளித்ததாகவும் ஐநா சபையில் தப்பிய மகிழ்ச்சியில் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். அவன் சோனியாவையோ , மன்மோகனையோ பாராட்டியதில் எனக்கு எந்த ஒரு ஆச்சரியம் இருக்கவில்லை. ஆனால் அவனது தமிழக மக்கள் மேலான பாராட்டுதான் என்னை உணர்ச்சி வசப்பட வைத்தது. என்ன ஒரு வஞ்சப் புகழ்ச்சி. அவன் வார்த்தைகளில் தொக்கி நிற்பது , ஈழத்தில் என்ன நடந்தாலும் இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். எதோ வருத்தப்பட்டு பேசிவிட்டு தமது கடமை முடிந்தது என்று போய்விடுவார்கள் எனபதுதான்.
இதே மாதிரியான ஒரு ஒத்த கருத்தை என்னுடன் பணிபுரியும் சற்றே நடுநிலைமையான ஒரு சிங்களவனும் பகிர்ந்திருந்தான் . நாங்கள் நினைத்தோம் இந்திய அரசும் தமிழக மக்களும் எங்களை ஒரு வழி பண்ணுவார்கள் என்று. ஆனால் தங்களை தாங்கள் வருத்திக் கொண்டு , வேலை நிறுத்தம் பண்ணிக்கொண்டு தீயிட்டு எரித்துக்கொண்டு அமைதியாகி விட்டனர். இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் பிரச்னை எமக்கு தெரியும். ஆனால் தமிழகத்துக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை? தமிழகத்தில் மாட்டும் நாங்கள் ( சிங்களவர்கள் ) இருந்து இலங்கையில் சிங்களவர்கள் சிறுபான்மையாக இருந்து துன்பம் அனுபவித்திருந்தால் , இன்னொரு விடுதலை போராட்டமே நாம் அந்த நாட்டில் நடத்தியிருப்போம் என்றான். மேலும் தமிழக தமிழர்கள் எப்படி இந்தியா பெரிதும் உணர்வுகளை புரிந்து கொள்ளாவிட்டாலும் சமாளித்துக் கொண்டு வாழ்கின்றனர் , ஏன் நீங்கள் அவ்வாறு இருக்க கூடாது என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டான் . அவனுக்கு ராஜீவ் கொலை பற்றியெல்லாம் விளக்கி தமிழகத்தை காப்பாற்ற முனைந்தேன். ஒரே ஒரு வசனம் சொன்னான் , நான் ஒரு சிங்களவன் , என்னக்கு தெரியும் 50 000 மக்கள் கொல்லப்பட்டது . அவர்களை கொல்லாது புலிகளை அழிக்கமுடியாது எனத் தெரிந்த எனக்கே சிறிது அனுதாபமுள்ளது. குற்ற உணர்ச்சி உள்ளது . ஆனால் எவ்வாறு தமிழக மக்கள் இந்திய படை அனுப்பி 10 000 மக்களை கொன்று குவித்த ராஜீவுக்காக , இந்த 50 000 மக்களின் கொலைக்கு காரணம் சொல்லி அமைதியாகி விட்டனர் என்று மேலும் கேட்டான். நான் தமிழ் நாட்டில் நடந்த போராட்டங்களை அவனுக்கு எடுத்து கூறினேன். அவனோ , அதான் தேர்தலில் பார்த்தோமே தமிழக மக்களின் மன நிலையை என்றான் ஏளனமாக. என்னால் பெருமூச்சுதான் விட முடிந்தது.
சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக , தமிழக மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான தேர்தலை ஈழத்துக்கான கருத்துக்கணிப்பாக மாற்ற முற்பட்டு அதில் தோல்வியுற்று முழு உலகத்துக்கும் தமிழக மக்கள் ஈழத் தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவில்லை எனக் காட்டி தற்போது ராஜபக்ச கையால் சான்றிதழ் பெறவும் வைத்துவிட்டனர்.எதிகால வரலாற்றிலும் தமிழ் ஈனத் தலைவர்களாக பெயரும் எடுத்து விட்டனர்.
தற்போதுதான் திடீர் எனக் கண்டுபிடித்தது போல
சில ஜனநாயக இலக்கிய வாதிகளின் பேனா
ஈழப் போர்ராட்ட முறையே தவறு எனும்போதுதான்
புலிகளை இழந்தது , இதயத்தில் சுடுகின்றது
புலிகளின் ஆயுதங்கள் மௌனமாக்கப் பட்ட இந்த சூழ்நிலையில், உலகின் பல்வேறு பாகங்களிலும் ஏன் ஆயுதப் போராட்டம் தோல்வி உற்றது என ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு பட்டவர்களும் தத்தமது மனநிலைக்கு ஏற்றவாறு தமது கண்டுபிடிப்புகளை வெளியிட்டு மகிழ்ச்சியும் வேதனையும் அடைந்து , வாசிபவ்ர்களையும் தூண்டுகின்றனர். இந்த நிலையில் புலிகள் அஹிம்சை வழியில் போரிட்டிருந்தால் வெற்றி பெற்று இருப்பார்கள் என்றும் பலர் எண்ணத் தலைப்பட்டு வருகின்றனர்.
நான் இங்கே, காந்தி வழியை கொச்சை படுத்த விரும்பவில்லை. சில வரலாற்று உதாரணங்களுடன் , ஏன், ஈழத்தமிழரால் அதில் நம்பிக்கை வைக்க முடியவில்லை என்று கூற விரும்புகின்றேன்.
1956 ம ஆண்டு இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற கோஷத்துடன் , பண்டாரநாயக்க ( சந்திரிகாவின் தந்தை ) ஆட்சியைப் பிடித்தார். இதை அவர் சட்டமாக்க முற்பட்டபோது, அன்றைய ஈழத் தமிழ் தலைவர்கள் செல்வநாயகம் தலைமையில் சத்தியாக்கிரகம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினர். ஏறத் தாழ 4 , 5 மாதங்கள் நடைபெற்ற இந்த சத்தியாகிரகம் , கொழும்பில் பாராளுமன்றத்துக்கு முன்னர் கூடியிருந்த சத்தியாகிரவாதிகளின் மீது சிங்கள குண்டர்கள் நடத்திய தாக்குதலுடனும் நாட்டில் ஏற்பட்ட முதல் இனக்கலவரத்துடன்( http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_riots_of_1958) 300 தமிழ் மக்களை பலிவாங்கி முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் 1959 இல் பண்டாரநாயக அந்த சட்டத்தை வாபஸ் வாங்க தீர்மானித்த பொது ஒரு புத்த பிக்குவால் சுடப்பட்டார். இலங்கையின் முதலாவது அரசியல் படுகொலை அது.அதன் பின்னர் அமைதி வழிப் போர்ரடங்கள் நடத்தப்படுவதும் நசுக்கபோவதுமாக இருந்தது.
1974 இல் யாழ்பாணத்தில் நடந்த நான்காம் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் (http://en.wikipedia.org/wiki/1974_Tamil_conference_incident) , இலங்கை காவல் துறையினர் புகுந்து சுட 9 தமிழர்கள் பலியாக ஈழ தமிழ் வாலிபர்கள் ஆயுதம் எந்த நிர்பந்திக்கப் பட்டனர். அந்த நேரதில் பெறப்பட்ட வங்க தேச விடுதலை தமிழர்களை உற்சாகம் அடைய செய்தது. உண்மையில் வங்க தேச விடுதலையில் இந்தியாவின் குறுகிய அரசியல் உள்நோக்கம் தெரியாது உணர்ச்சி வசப்பட, வங்க போரில் இலங்கை பாக்கிஸ்தானுக்கு உதவிய கோபத்தில் இருந்த இந்தியா அதற்கு கொம்பு சீவிவிட்டது.
பின்னர் 1983 இல் நடைபெற்ற இனக்கலவரம் (http://en.wikipedia.org/wiki/1983_riots) ஏறத்தாழ அனைத்து ஈழத் தமிழர்களையும் ஆயுதப் போராட்டமே முடிவு என்று முடிவெடுக்க வைக்க ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து ஊக்குவித்தது இந்தியா. பின்னர் 1987ல் சிங்கள படைகளின் அட்டுழியம் எல்லை மீறிப்போக உணவுப் பொட்டலங்களுடன் பிரசன்னமானது இந்தியா. பின்னர் இந்திய நலன்களுக்கு முக்கியம் கொடுத்து வரையப்பட்ட ஒப்பந்தம் இலங்கை அரசுடன் கைச்சாத்தாகி , தான் கொடுத்த ஆயுதங்களை தானே களைய ஆரம்பித்தது இந்தியா
இதையே எதிர்பார்த்திருந்த சிங்கள படைகள் போராளிகள் மேல் தாக்குதல் நடத்தி , ஒப்பந்தை அமுல்படுத்தாது இழுத்தடிக்க வேடிக்கை பார்த்தது இந்தியா. அப்போது புலிகளின் அரசியல் துறையை சேர்ந்த தியாகி திலீபன் 12 நாட்கள் நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருக்க (http://en.wikipedia.org/wiki/Thileepan) , காந்தி தேசம் வேடிக்கை பார்த்தது. இந்தியா அரசு நினைத்திருந்தால் , அதை தடுத்து பேச்சு வார்த்தையோ அல்லது பிரிடிஷ் அரசு செய்தது போல கைது செய்து வைத்தியசாலையில் சேர்த்திருக்கலாம். இது எதனையும் செய்யாது , நாம் இந்தியா , பிரிடிஷ் அல்ல என நையாண்டி மட்டுமே அன்று ஈழ தமிழருக்கு கிடைத்தது. இவ்வாறான கசப்பான அனுபவங்களே ஈழத் தமிழரை ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைக்க தூண்டி இன்று இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது.
நான் இங்கே புலிகளின் தவறுகளையோ போராட்டத்தினை மக்கள் மயப் படுத்தாதையோ நியாயபடுத்த வரவில்லை. நாம் எந்த ஆயுதத்தினை எடுக்க வேண்டும் என்று நமது எதிரியே தீர்மானிக்கின்றான் என்ற மா ஒ வின் கருத்துக்கு ஈழத் தமிழர் பலியாகி , ஆயுதம் தூக்க நிர்பந்திக்க பட்டு இந்த நிலைக்கு ஆளாகி விட்டனரே என்ற ஆதங்கத்தில் தான் எழுதுகின்றேன்.
ஒவ்வொரு முடிவும் இன்னொரு தொடக்கம் என்பது உலக நியதி . காத்திருப்போம்
புலிகளின் தலைவரின் வீர மரணம் பற்றி இன்னுமே எவராலும் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை, அந்த இருண்ட இறுதிக் கணங்கள் புலிகளின் தலைவருக்கும் இன்னும் சிலருக்குமே வெளிச்சம். அதை மக்களுக்கு வெளிக்காட்ட அந்த சக்திகளும் தயாரில்லை .
இந்த நிலையில் பல்வேறு சக்திகள் பல கட்டுக் கதைகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி தமிழ் உணர்வாளர்களை மனம் தளர வைக்க முயற்சித்து வருகின்றன.
முதலில் தலைவர் உயிருடனுள்ளதாக அறிவித்த புலிகளின் அனைத்துலக செயலகம், தற்போது வீரசாவடைந்தாக துக்கம் அனுஷ்டிகின்றது. தமிழக தமிழின உணர்வாளர்களான நெடுமாறனும் வைகோவும் , "இது தவறான செய்தி , தலைவர் வருவார்" என்கின்றனர். பத்மநாதனை கண்டிக்கின்றனர். தமிழின விரோதிகள் எதிர்பார்த்தும் இதைத்தான். தலைவரின் மரணம் , ஈழ மற்றும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அத்துடன் இனிவரும் புலிகளின் தலைமை , இந்த அனுதாபத்தை பயன் படுத்தி இது வரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் நடுநிலைமை வகித்தவர்களையும், ஒன்று திரட்டி விடுமோ என்ற அச்சமும் இந்த தமிழின விரோதிகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளிடன் உள்ளது. எனவே தலைவர் மரணத்தை ஒரு வதந்தியாக வைத்திருப்பது , இவர்களுக்கு சாதகமே. அத்துடன் புலித் தலைமை இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி , இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கூட , ஈழ தமிழரை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தவும் மேலை நாடுகளை பாராமுகமாக வைத்திருக்கவும் முடியும்.
இந்த நிலையில் இதுவரை புலித்தலைமையை விமர்சித்து , புலிகளால் தான் எல்லாமே என்று கண்ணை மூடிக்கொண்டு அறிக்கை விட்டு தம்மை தாமே மாற்றுக் கருத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்ளுபவர்கள் , இன்று , புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளரை , தூரோகி என்றும் காட்டிக் கொடுத்தவர் என்றும் கூறத் தலைப் பட்டிருக்கின்றனர் . இதுவரை காலம் அவர்கள் சுமத்திய குற்ற சாட்டுக்களான, தனது பிள்ளைகளை யுத்தத்தில் ஈடுபடுத்த வில்லை , யுத்த வலயத்தை விட்டு ஓடிவிட்டார் போன்றவை பொய்யாக , என்ன செய்வதறியாது திகைத்துபோய் நிக்கின்றனர், மற்றும் அவர்களை பொறுத்தவரை புலித் தலைமை மரணமடைந்து விட்டது இனியும் எதிர்த்து அறிக்கை விட்டால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனக் கண்டு கொண்டனர் .
இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் எனியும் ஒரு வலிமையான தமிழ் தலைமை வர அனுமதிக்க போவதில்லை. தமக்கும் அந்த இடத்தை நிரப்ப ஆளுமை கிடையாது என்றும் தெரியும். அத்துடன் வெறுமனே கண்டன அறிக்கை விட்டு பழகிப் போன இவர்கள் இன்று யாரை எதிர்ப்பது என்று தெரியாது புலம்பி தமது அடுத்த இலக்காக தெரிவு செய்திருப்பது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் பத்மநாதனை.
நான் இங்கே புலித்தலைவர் இறந்து விட்டதாகவோ , பத்மனாதனுக்காக வாதிடவோ வரவில்லை. எனது ஆதங்கமெல்லாம் , தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய இந்த தருணத்தில் அவர்களை குழப்பத்தி ஆழ்த்தி பேரினவாதிகளுக்கு துணை போகின்றனரே இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் என்பது மட்டுமே. புலிகள் மட்டும் ஒதுங்கிக் கொள்ளட்டும் , தமிழ் மக்களுக்கு நாம் விடுதலை பெற்று தருவோம் என்றெல்லாம் முழக்கமிட்டனர் இந்த மாமணிகள். இப்போதுதான் அந்த சூழ்நிலை வந்துவிட்டதே , ஈழத்துக்கு போய் உதவுவார்கள் என்று பார்த்தால் , எனி யாரை எதிர்த்து அறிக்கை விடலாம் என்று சிந்திகின்றன்ர் இந்த புத்தி ஜீவிகள்.
மக்களே தயவு செய்து , இந்த (ஏ) மாற்று காரர்களின் பேச்சை நம்பி பேரினவாதத்துக்கு சோரம் போய்விடாதீர்கள். இந்த போராட்டத்தில் நாம் உண்மையான மாற்றுக் கருத்தாளர்களை உருவாக்காது , எட்டப்பர்களை மட்டுமே உண்டாக்கி உள்ளோம் .இதற்கு என்ன காரணம் என்று விவாதம் செய்து ஒருவர் மேல் ஒருவர் பழியை போடாது, எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்.
