(மேலதிக பத்திகள் இணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பதிப்பு)
புலிகளின் தலைவரின் வீர மரணம் பற்றி இன்னுமே எவராலும் சரியாக உறுதிப்படுத்த முடியவில்லை, அந்த இருண்ட இறுதிக் கணங்கள் புலிகளின் தலைவருக்கும் இன்னும் சிலருக்குமே வெளிச்சம். அதை மக்களுக்கு வெளிக்காட்ட அந்த சக்திகளும் தயாரில்லை .இந்த நிலையில் பல்வேறு சக்திகள் பல கட்டுக் கதைகளை உருவாக்கி வதந்திகளை பரப்பி தமிழ் உணர்வாளர்களை மனம் தளர வைக்க முயற்சித்து வருகின்றன.
முதலில் தலைவர் உயிருடனுள்ளதாக அறிவித்த புலிகளின் அனைத்துலக செயலகம், தற்போது வீரசாவடைந்தாக துக்கம் அனுஷ்டிகின்றது. தமிழக தமிழின உணர்வாளர்களான நெடுமாறனும் வைகோவும் , "இது தவறான செய்தி , தலைவர் வருவார்" என்கின்றனர். பத்மநாதனை கண்டிக்கின்றனர். தமிழின விரோதிகள் எதிர்பார்த்தும் இதைத்தான். தலைவரின் மரணம் , ஈழ மற்றும் தமிழக மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றனர். அத்துடன் இனிவரும் புலிகளின் தலைமை , இந்த அனுதாபத்தை பயன் படுத்தி இது வரை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடாதவர்களையும் நடுநிலைமை வகித்தவர்களையும், ஒன்று திரட்டி விடுமோ என்ற அச்சமும் இந்த தமிழின விரோதிகள் மற்றும் ஏகாதிபத்திய வாதிகளிடன் உள்ளது. எனவே தலைவர் மரணத்தை ஒரு வதந்தியாக வைத்திருப்பது , இவர்களுக்கு சாதகமே. அத்துடன் புலித் தலைமை இன்னும் உயிருடன் இருப்பதாக கூறி , இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் கூட , ஈழ தமிழரை மேலும் அடக்குமுறைக்கு உட்படுத்தவும் மேலை நாடுகளை பாராமுகமாக வைத்திருக்கவும் முடியும்.
இந்த நிலையில் இதுவரை புலித்தலைமையை விமர்சித்து , புலிகளால் தான் எல்லாமே என்று கண்ணை மூடிக்கொண்டு அறிக்கை விட்டு தம்மை தாமே மாற்றுக் கருத்தாளர்கள் என்று அழைத்துக் கொள்ளுபவர்கள் , இன்று , புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளரை , தூரோகி என்றும் காட்டிக் கொடுத்தவர் என்றும் கூறத் தலைப் பட்டிருக்கின்றனர் . இதுவரை காலம் அவர்கள் சுமத்திய குற்ற சாட்டுக்களான, தனது பிள்ளைகளை யுத்தத்தில் ஈடுபடுத்த வில்லை , யுத்த வலயத்தை விட்டு ஓடிவிட்டார் போன்றவை பொய்யாக , என்ன செய்வதறியாது திகைத்துபோய் நிக்கின்றனர், மற்றும் அவர்களை பொறுத்தவரை புலித் தலைமை மரணமடைந்து விட்டது இனியும் எதிர்த்து அறிக்கை விட்டால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் எனக் கண்டு கொண்டனர் .
இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் எனியும் ஒரு வலிமையான தமிழ் தலைமை வர அனுமதிக்க போவதில்லை. தமக்கும் அந்த இடத்தை நிரப்ப ஆளுமை கிடையாது என்றும் தெரியும். அத்துடன் வெறுமனே கண்டன அறிக்கை விட்டு பழகிப் போன இவர்கள் இன்று யாரை எதிர்ப்பது என்று தெரியாது புலம்பி தமது அடுத்த இலக்காக தெரிவு செய்திருப்பது புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் பத்மநாதனை.
நான் இங்கே புலித்தலைவர் இறந்து விட்டதாகவோ , பத்மனாதனுக்காக வாதிடவோ வரவில்லை. எனது ஆதங்கமெல்லாம் , தமிழ் மக்கள் ஒன்று படவேண்டிய இந்த தருணத்தில் அவர்களை குழப்பத்தி ஆழ்த்தி பேரினவாதிகளுக்கு துணை போகின்றனரே இந்த (ஏ) மாற்று கருத்தாளர்கள் என்பது மட்டுமே. புலிகள் மட்டும் ஒதுங்கிக் கொள்ளட்டும் , தமிழ் மக்களுக்கு நாம் விடுதலை பெற்று தருவோம் என்றெல்லாம் முழக்கமிட்டனர் இந்த மாமணிகள். இப்போதுதான் அந்த சூழ்நிலை வந்துவிட்டதே , ஈழத்துக்கு போய் உதவுவார்கள் என்று பார்த்தால் , எனி யாரை எதிர்த்து அறிக்கை விடலாம் என்று சிந்திகின்றன்ர் இந்த புத்தி ஜீவிகள்.
இதில் ஒரு புகழ் பெற்ற (ஏ) மாற்றுக் கருத்தாளர், இனியும் தான் இலங்கை போக முடியாது , ஏனென்றால் இலங்கை அரசின் அச்சுறுத்தல் உள்ளது என்கின்றார். இலங்கை அரசையும் யாரும் வந்து அழித்த பின்தான் போவாரோ ?.இன்னும் சில மாற்றுக் கருத்தாளர்கள் , எப்போதும் பாசிசம் சார்ந்த எதிரியை தேடுபவர்கள். புலித்தலைமை இருக்கும் வரை , பாசிசப் புலிகள் என கர்சிதவர்கள் , இப்போது பாசிஸ்ட் மகிந்த என உறுமுகின்றனர் . இவர்களுக்கு பாசிசம் என்ற வார்த்தையை கற்றுக் கொடுத்த ஆசிரியரைப் பிடித்து வாங்கு வாங்கவேண்டும் ஏனையா இவர்களுக்கு போய் இதை கற்றுக் கொடுத்து , ஒரு சமுதாயத்தையே கடுப்படித்த பாவத்துக்கு ஆளாகி விட்டீர்களே என்று.
மாற்றுக் கருத்துகள் ஜனநாயகத்துக்கு அவசியம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. ஆனால் எதிர்ப்பு அரசியல் நடத்தியே பழகிபோய் , தன்னை வித்தியாசப் படுத்திக் காட்டுவதற்காக , இவ்வாறான் கருத்துகளை வெளிபடுத்துவது ஜனநாயகத்துக்கு எந்த வழியிலும் ஆரோக்கியத்தை ஏற்படுத்தமாட்டாது. மக்களே தயவு செய்து , இந்த (ஏ) மாற்று காரர்களின் பேச்சை நம்பி பேரினவாதத்துக்கு சோரம் போய்விடாதீர்கள். இந்த போராட்டத்தில் நாம் உண்மையான மாற்றுக் கருத்தாளர்களை உருவாக்காது , எட்டப்பர்களை மட்டுமே உண்டாக்கி உள்ளோம் .இதற்கு என்ன காரணம் என்று விவாதம் செய்து ஒருவர் மேல் ஒருவர் பழியை போடாது, எமது இனத்தின் விடுதலைக்காக உழைப்போம் இந்த புதிய நெடிய களத்தில்.
என்னைப் பற்றி....
Welcome
எனது பதிவுகளை தமது தளங்களில் மீள் இடுகையிட விரும்புவோர் , எனது தள முகவரியை கண்டிப்பாக அந்தப் பதிவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிடின் படைப்புத் திருட்டு என்றே கருதப்படும். நன்றி
Blog Archive
-
▼
2009
(18)
-
▼
June
(6)
- ராஜிவ் காந்தி கொலையே , இந்தியாவின் ஈழத் தமிழின ஒழி...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - வரலாற்றுத் தேவை
- இனவெறி யுத்த வெற்றி இலங்கைக்கு T20 உலக கிண்ணத்தை ப...
- காந்தியின் உண்ணாவிரதம் - இன்று ??? அல்லது பாந்த...
- மாற்றுக் கருத்தாளர் ரயாகரனுக்கு ஒரு வேண்டுகோள் : ...
- (ஏ) மாற்று கருத்தாளர்களின் அடுத்த இலக்கு யார்?
-
▼
June
(6)
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
Labels:
ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
arumayana karuthu ayya.. kalathuku yetra sinthanai.. ithu mattum ovoru tamilanin arivukkum pulapattal thaan aduthu enna seiyya vendum enbtathu thanagavey ovoruvarukkum vilangum
நன்றி நண்பரே, தெளிவோம் சிந்திப்போம் , உரிமைகளைப் பெறுவோம்
வை.கோவும் , நெடுமாறனும் அவசரப்பட்டுவிட்டார்களோ என எண்ணத தோன்றுகிறது.
பத்மநாதன் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒருவர். முப்பது வருடங்களுக்கு மேலாக தலைவர் சொன்னதைச் செய்து முடித்தவர். அவர் எப:படித் துரோகியாக முடியும் ? அப்ப துரோகியாவதானால் அவர் பல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி துரோகம் செய்திருக்கலாம்.
இடையில் சிலரது குழப்பங்களுக்கு வை.கோ, நெடுமாறன் ஆகியோர் தளம்பிவிட்டார்கள். இவ்விருவரும் தலைவரால் நேசிக்கப்பட்டவர்கள். ஆனால் பத்மநாதன் தலைவருடன் ஒன்றாய் வாழ்ந்தவர்.
களக்கொலை புரிந்தவர்களை உலகம் தண்டிக்க வேண்டும். அதற்கு அனைவரும் துணையாயிருங்கள்.
சாந்தி
சாந்தி
எதையுமே உறுதிப் படுத்த முடியவில்லை சாந்தி. என்றாலும் நமது கடமையை செய்வோம் தெளிவுடன்
இவங்களுக்கு எதிர்பரசியல் நடத்தியே பழகி விட்டது , நேத்து புலி , இன்னிக்கு மஹிந்த நாளைக்கு பாசிச தமிழினமே என்றும் சொல்லுவாங்கள் . காகிதப் புலிகள்
வன்னிப் பேரவலம் நடத்த மறு நாள் , இந்த ஜனநாயகவாதிகளின் வலைத்தளங்கள் சற்றே அடக்கி வாசிக்க , இவர்களை தவறாக புரிந்து கொண்டோமோ என எனக்குள் ஒரு சிந்தனை வந்தது. ஆனால் மறுநாளே , பழைய குருடி கதவைத் திருடி கதையாக , புலிகள் பக்கம் அனுதாபம் பிறந்துவிடுமோ என விஷம் கக்க தொடங்கி விட்டார்கள்.
கான்கிரீட்டா நீங்க என்னதான் சொல்ல வர்றீங்க?
ஒரே குழப்பமா இருக்கே
எமகென்று ஒரு விடுதலை இயக்கம் பிரதிநிதித்துவம் செய்தபோது , சரியோ பிழையோ, எமக்கென்றொரு குரல் இருந்தது. அரசாங்கத்துக்கு , மாற்று சக்திகளை விரும்பியோ விரும்பாமலோ , அரவணைக்க வேண்டிய தேவை இருந்தது. இப்போது மேற்கண்ட இரண்டும் கேள்விக்குறியாக , நாம் ஓரணியில் திரண்டு ஒரு குரலென எமது உரிமைகளை முழக்க வேண்டும். ஆனால் இருபது வருடங்களாக மாற்றுக் கருத்து எனும் போர்வையில் எதிர்பரசியல் காகிதத்தில் நடத்திவரும் இவர்கள் , ஏன் இன்னும் , போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் பக்குவத்தை பெறவில்லை என்பதே எனது ஆதங்கம்
தமிழ் அரங்க்ககாரர் ஒரு பெரிய்ய விளக்கம் அளித்துள்ளாரே, பார்த்தீர்களா ?
ரயாகரன் ஒரு அரசியல் விமர்சகராக மட்டுமிருக்கவே விரும்புகின்றாரோ தெரியவில்லை.
Post a Comment