நான் சொல்லித்தான் , தமிழ் அரங்கம் ரயாகரன் பற்றி உங்களுக்குகெல்லாம் தெரிய வேண்டுமென்பது கிடையாது. அவரே தமிழில் இது போல ஒரு இணைய தளம் கிடையாது என்று சொல்லிவிட்டார் . உண்மைதான். மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்ட பக்கங்கள். ஆயிரக் கணக்கான கட்டுரைகள் , நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், ஒரு ஆவணக் காட்சியகத்தையே தன்னுள் கொண்டிருக்கும் இணைய தளம். எனது நண்பன் ஒருவன் சொல்லுவான் , பாசிசம் என்று ரயாகரன் தொடங்கினார் என்றால் , மடை திறந்த வெள்ளம் போல எழுதிக் கொட்டிவிடுவார் என்று.
தமிழ் தேசிய உணர்வாளர்கள் கூட , தினமும் வருகை தரும் ஒரு சிறந்த வலைப்பக்கம். மாற்றுக்கருத்து எனும் அடை மொழியை தூக்கிப் பிடிப்போரில் , எனக்கு ரயாகரனை பிடிக்கும். என்னதான் தனி இயக்கத்தில் இருந்து , புலிகளுக்கு எதிராக பல்கலைகழகத்தில் போராட்டம் நடத்தி , புலிகளால் கைதும் , ரயாகரன் பார்வையில் கடத்தப்பட்டும் இருந்தாலும் , பேரினவாத சிங்கள கொலை வெறி அரசின் அராஜகங்களை , வெளிக்கொணர்வதில் முழு மூச்சாக உள்ளவர். பாசிசம் என்று எழுதி எழுதி பழக்கப்பட்டதாலோ என்னவோ , இப்போது பாசிச மகிந்த என்றே எழுதி வருபவர்.
வன்னியில் இடம் பெற்ற பொது மக்கள் படு கொலையை , பெண் போராளிகளின் இறந்த உடல்களின் மேல் சிங்கள வெறி நாய்கள் நடத்திய கோரத்தாண்டவங்களை , உடனுக்குடன் உலகுக்கு வெளிபடுதியவர். வன்னிப் பேரவலம் நடந்த பின் அடுத்த ஓரிரு நாட்களில் அவர் எழுதிய அல்லது பிரசுரித்த கட்டுரைகள் எல்லாம் , ஒரு உண்மையான நடுநிலமையான மாற்றுக் கருத்தாளராக அவரை வெளிபடுதியவை. ஆனால் அவர் பற்றிய இந்த தற்காலிக எண்ணக் கருக்கள் எல்லாம் அடுத்தடுத்த நாட்களில் அவராலேயே கருக் கலைப்பு செய்யப்பட்டன.
தனது எழுத்துகள் , சிங்களப் பேரினவாதத்துக்கு துணை போனாலும் பரவாயில்லை , புலிகள் பற்றிய மக்களின் பார்வை அழிந்தொழிந்து போகவேண்டும் எனக் கொக்கரிகின்றார். நீங்கள் ஏன் ஈழம் சென்று போராடக் கூடாது எனக்கேட்டால் , அதற்கான வழிகள் ஏற்படின் அதைச் செய்வோம் என சலாப்புகின்றார்.
தோழர் ரயாகரன் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், ஆயிரம் விமர்சனங்கள் இருந்ததாலும் , புலிகளின் தலைவரும் புலிகளும் , பெரும்பான்மையான ஈழத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். நடுநிலையாக இருந்த தமிழர்கள் கூட , வன்னிப் பேரவலத்தின் பின்னர் , புலி ஆதரவுக்கு மாறிவிட்டனர். இந்த நிலையில் புலிகளுக்கு எதிராக இருப்பவர்கள் யார் எனின் , புலிகளால் தனிப்பட்ட ரீதியில் பாதிப்பு அடைந்தவரே எஞ்சுகின்றனர் . இந்த நிலையில் உங்களின் இந்த மாதிரி கட்டுரைகளும் மீள்பதிப்புகளும் , மக்களிடமிருந்து உங்களை மேலும் அன்னியப் படுத்தவே செய்யும். நான் உங்கள் தனிப்பட்ட காயங்களை புரிந்து கொள்கின்றேன் . புலிகளால் பாதிக்கப்பட்ட கோபத்தில் , தமிழின தூரோகியாக மாறி , சிங்கள மற்றும் இந்திய அரசுக்களின் அடிவருடிகளாக மாறாமல் , தமிழர் மீதான இனப் படுகொலைகளை எதிர்த்து நிற்கின்றீர்கள். அதை நான் மதிக்கிறேன். போற்றுகின்றேன் . அதே நேரத்தில் , உங்ககளுக்கு நீங்களே சுய விளம்பரம் செய்வது , இவை அனைத்தையும் மறைத்துவிடும் .
மக்களுக்காக போராட போகும் போது நாம் தாம் அதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர , "அதற்கான வழிகள் ஏற்படின் செய்வோம்" என இருத்தல் , ஒரு உண்மையான மக்கள் போராளிக்கு இலக்கணமல்ல.
மீண்டும் சொல்கின்றேன் , நீங்கள் ஒரு தமிழ் உலகம் அறிந்த எழுத்தாளர் மற்றும் தமிழ் மக்களுக்காக இன ரீதியிலும் , சமுக ரீதியிலும் மற்றும் கலாசார ரீதியிலும் போராட்டம் நடத்தியவர் , நடத்துபவர். 1987 ல் இந்திய படைகளுடன் மீள் பிரசன்னமான , தமிழ் ஆயுதக் குழுக்கள் , எவ்வாறு கொஞ்ச நஞ்சமிருந்த தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதறடிதனவோ, அவ்வாறு இல்லாது , நீங்கள் தமிழ் மக்களை ஒருங்கிணைக்க உதவவேண்டும். உங்கள் எழுத்தாற்றல், அரசியல் மற்றும் சமூகப் பார்வை நீங்களும் நாமும் நன்கு அறிந்தவை. இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் இனியும் எமக்கு கிடைக்கப் போவதில்லை, இது இறுதி சந்தர்ப்பமும் கூட. உங்களால் முடியும் தோழர் ரயாகரன். தயவு செய்து நடத்திக் காட்டுங்கள்.
என்னைப் பற்றி....
Welcome
எனது பதிவுகளை தமது தளங்களில் மீள் இடுகையிட விரும்புவோர் , எனது தள முகவரியை கண்டிப்பாக அந்தப் பதிவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிடின் படைப்புத் திருட்டு என்றே கருதப்படும். நன்றி
Blog Archive
-
▼
2009
(18)
-
▼
June
(6)
- ராஜிவ் காந்தி கொலையே , இந்தியாவின் ஈழத் தமிழின ஒழி...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - வரலாற்றுத் தேவை
- இனவெறி யுத்த வெற்றி இலங்கைக்கு T20 உலக கிண்ணத்தை ப...
- காந்தியின் உண்ணாவிரதம் - இன்று ??? அல்லது பாந்த...
- மாற்றுக் கருத்தாளர் ரயாகரனுக்கு ஒரு வேண்டுகோள் : ...
- (ஏ) மாற்று கருத்தாளர்களின் அடுத்த இலக்கு யார்?
-
▼
June
(6)
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
Labels:
ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)

18 comments:
இவன் ரயாகரன் ஒரு க்க்கிதப் புலி இவன் ஒன்று சேர்க்க போறானா? பெரிய்ய ஜோக் கண்டும் கானான்
orungkinaikka ventiyathu avasiyam thaan. aanaal , rayakaran , shoba shakthikelaam antha thakuthi kitaiyaathu
// இவன் ரயாகரன் ஒரு க்க்கிதப் புலி இவன் ஒன்று சேர்க்க போறானா? பெரிய்ய ஜோக் கண்டும் கானான் //
காகிதம் மூலமும் பேனா மூலமும் மக்களை ஒன்று திரட்டமுடியும். அவர் காகிதத்தில் இது வரை புலியாக இருந்து , இனி களத்தில் புலியாக ( விடுதலைப் புலிகளை கூறவில்லை ) செயற்பட்டால் முழு தமிழ் இனமே பயன் பெரும் என்று கூறுகின்றேன்
// orungkinaikka ventiyathu avasiyam thaan. aanaal , rayakaran , shoba shakthikelaam antha thakuthi kitaiyaathu //
உள்ளத்தே சிறிதளவு மனசாட்சியும் தாய் நிலப் பற்றும் இருந்தால் போதும்.
he is paid for the doing. avar solli than army panniya aniyaayam varavillai. aalamaka paarthal athil ullathallam puli meethu ulla aalamana veruppe. manndiyettu mandardiya pulikal endu eluthuvathan moolam avarin vakkiramana ennam vilipadum. mattum padi manihta urimai endu eluthuvathu ellam nadunilamai endu kaatuvartke. ellam emaatru velai. aallamaka padithal ovoru vaarthayum pulikaluku meel ulla aallamana verupppe irukkum. athavi vida veru ondurm illla.
துக்க வீட்டில் மாலை கேட்கத் துடிப்பவன் இரயாகரன்.இவனுக்கு இவனுடைய கூட்டாளிகளுக்கெல்லாம்
இணையத்தில் எழுதிப்புரட்சி செய்வோம் மக்களை ஏமாற்றுவோம் என்றிருந்த கடதாசிகளுக்கு புலியின் இழப்பு பேரிழப்பு. புலியிருந்தால் தானே எதிர்ப்பு மாதிரிக்காட்டி இந்தச் சனியள் தமிழனைப் பிடித்துக் கொள்ளும்.இனி என்ன பம்மாத்து விடுகிறார்கள் என்று பார்ப் போம். இவனையெல்லாம் ஒரு மனிதன் என்று எழுதுகிற நீங்கள் எல்லாம் அவரின் சுய புகழைப்பாட ஏவப்பட்ட தூதர்களென நானறிவேன்.
இன்னும் தொடரட்டும் அவரின் சுய புராணம்.
சுப்ரமணி
அனானி மற்றும் பாரதி,
நீங்கள் பட்ட அதே ஆதங்கம் மற்றும் வேதனை தான் , என்னை இவ்வாறான் ஒரு கட்டுரை வரைய தூண்டியது. நீங்கள் எனது முந்திய பதிவுகளை படித்திருந்தால் இதைப் புரிந்து கொண்டிருக்கலாம். இந்தப் பதிவின் தலைப்பு கூட , அதையே சுட்டி நிற்கின்றது. நான் இந்த வேண்டுகோளை மாற்றுக் கருத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் மற்றவர்களுக்கு முன்வைக்கவில்லை. ஏனெனில் அவர்கள் நீங்கள் குறிபிடும் அதே வக்கிரம் பிடித்தவர்கள். ஆனால் ரயாகரன் சிங்கள அரசின் கொடுமைகளை வெளிக் கொணர்வதில் எப்போதும் பின்னிற்க வில்லை. அதே நேரம் , புலிமீதான அவரது ஆழமான வெறுப்பு , தமிழின விரோதிகளுக்கு துணை நிற்காது , இந்தப் போராட்டத்தை இந்தப் புதிய களத்தில் முன்னெடுக்க உதவ வேண்டும் என்பதே எனது விருப்பம் .ஏனனில் எமது பொது எதிரியானவன் அனைத்து வழிகளிலும் எம்மை விடப் பலமாக நிற்க்கின்றான். இந்த சூழ்நிலையில் நாம் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எமது நிலை இப்படியாகிவிட்டது . யதார்த்தை புரிந்து கொண்டேன். எல்லாரும் வாங்க ஒண்ணா போராடுவோம்
நன்றி
hahahhahahah hahahahha hahahahh
ungal nampikkai vellattum
எல்லாரும் போராடுங்கள் ஒன்றிணையுங்கள் என்றால் யார் தான் இதை செய்வது ஆளாளுக்கு இப்படியே கேட்டுக் கொண்டிருந்தால் சரியா ?
எல்லார் மனதிலும் நாம் ஒன்றிணைய வேண்டும் எனும் வேட்கையை ஏற்படுத்தினோமானால், தானாகவே ஒரு பொது அமைப்பிடம் மக்கள் ஒன்று சேருவர். அதுவே எமது நம்பிக்கை
yuutha samukam pola meendum eluvom
சிறுகதை எப்படி இருக்கணும் என்று ஒருத்தன் விமர்சனம் பண்ணினானாம். அவனையே சிறுகதை எழுதச் சொன்னா தன் வேலை விமர்சிப்பது மட்டும் தான் என்றானாம்.
வணக்கம் புகழினி,
விமர்சகர்கள் எல்லாம் சிறுகதை எழுதவேண்டும் என்பது சரியான வாதமல்ல. ஆனால் , நாம் சிறுகதை எழுத அனுமதிக்க வில்லை எனக் கூக்குரலிட்டு , அதற்கான சந்தர்ப்பம் வரும்போது கண்மூடி இருக்கம் சில புத்திஜீவிகளுக்கு தான் இந்தப் பதிவு
neengal rayavai pulakinreerkala ikalkinreerkala?
உங்கள் கருத்தில் இருந்தே , ஏதோ நடுநிலைமையாக எழுதிவிட்டோம் என்று நான் கொஞ்சம் திருப்திப் பட்டுக் கொள்ளலாம்
Post a Comment