கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

பதிவை வாசிக்கும் முன் ,சில உணர்ச்சித் திலகங்களுக்கு ஒரு வேண்டுகோள்.இந்தப் பதிவு ராஜிவ் காந்தி கொலையை நியாயப்படுத்தி இடப்பட்டதல்ல.எந்த ஒரு கொலையையும் எந்த ஒரு நாகரிக மனிதனாலும் நியாயப் படுத்த முடியாது.இங்கே எனது நோக்கமானது,இன்று பலரால் நீட்டி முழங்கப் படுவது போல,"புலிகள் மட்டும் ராஜிவ் கொலையைப் பண்ணாமலிருந்தால் முழு இந்தியாவுமே ஈழத் தமிழர்களின் பின்னாலிருக்கும்" என்பது எவ்வளவு முட்டாள்தனமானது என ஆராய்வது மட்டுமே.உலகில் எந்த ஒரு நாடும் தனது நலன்களுக்கு மற்றும் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தே மற்றைய நாடுகளில் தலையிடுமே தவிர ,சமுக சேவை செய்து நீதியை நிலை நாட்டவேண்டும் என்று மூக்கை நுழைப்பதில்லை.இந்தியாவுக்கும் அவ்வாறான பின்வரும் நோகங்கள் இருந்தன

1. சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் நெருங்கி வரும் இலங்கையை தட்டி வைப்பது
2. இலங்கை அரசு , அமெரிக்க வானொலி நிலையத்தினை திருகோணமலையில் நிறுவ அனுமதித்து தனது மேற்குலகு சார்ந்த நிலையை வேளிகாட்டியத்தை முளையிலே கிள்ளுவது
3. திறந்த பொருளாதாரக் கொள்கையை 1977ல் அதாவது இந்தியாவுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் கைக்கொண்டு 92வீத எழுத்தறிவுடன் (இந்தியாவில் அப்போது 36 வீதம்) இலங்கை அடையத் தொடங்கிய துரித வளர்ச்சியினைத் தடுப்பது.

இதைத் தவிர யாராவது இந்திய மத்திய அரசு ,ஈழத் தமிழர் மேலுள்ள அக்கறையால் என வாதிட்டார்களானால், உலக நடப்பு தெரியாத அப்பாவிகள் என்றே அவர்களை அழைக்கலாம். நான் இங்கே தமிழக தமிழர்களின் இனஉணர்வு பற்றிக் கேள்வி எழுப்பவில்லை. இந்தியா என்னும் போது இந்திய மத்திய அரசையே குறிக்கும்.

இந்திரா காந்தி ஈழத் தமிழ்க் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கி தமிழ் நாட்டில் புகலிடமும் வழங்கப்பட்டது. இங்கே ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.குழு மோதல் தொடங்காத அந்தக் காலத்திலேயே அனைத்து குழுக்களும் தனித் தனியேயே தங்க வைக்கப்பட்டன. ஏறத்தாள கூலிபடைகள் போலவே இந்த இயக்கங்கள் நடத்தப்பட்டன.இதை அனைத்து இயக்கங்களும் உணர்ந்தே இருந்தன. இந்தியா எதிபார்த்த மாதிரியே , இலங்கை அரசு இந்தியாவின் காலடியில் விழுந்தது. திருகோணமலை எரிபொருள் களஞ்சியங்கள் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டு , வெளியுறவுக் கொள்கையில் இந்திய நலனுக்கெதிராக செயற்படமாட்டோம் என இலங்கை அரசு அறிவித்த மறு நிமிடமே , இந்தியா தான் கூலிப்படைகள் என அழைத்த தமிழீழ இயக்கங்களை ஆயுதத்தை போடுமாறு வற்புறுத்தியது. நில அதிகாரமோ , போலீஸ அதிகாரமோ அற்ற , கிராமசபைக்கு ஒப்பான திட்டத்தை மாகாண சபை எனத் திணித்தது.

இந்தக் காலகட்டத்தில் இலங்கையின் தென் பகுதியெங்கும் ,இலங்கை அரசு நாட்டை இந்தியாவுக்கு விற்று விட்டதாக கூறி பெரும் உள்நாட்டுக் கலவரமே வெடித்தது.ராஜிவ் காந்தியைக் கொள்வதற்கான திட்டம் கூட வகுக்கப்பட்டு ,ஒரு சிங்கள சிப்பாய் ,ராஜிவ் காந்தியை தலை மண்டையில் அடித்துக் கொள்ள முயற்சிக்க , மயிரிழையில் தப்பினார் ராஜிவ்.அப்போதைய இலங்கைப் பிரதமர் பிரேமதாச மற்றும் சிங்கள மக்களால் தேசபக்தன் அந்த சிங்கள சிப்பாய் புகழப்பட்டு ஒரே நாளில் கதாநாயகன் ஆனான். அதன் பிறகு பிரேமதாசா ஜனாதிபதியாக அந்த சிப்பாய் விடுதலை செய்யப்பட்டு, அரசால் மதிப்பளிக்கப் பட்டான். இவ்வாறு எல்லாம் நடந்தும் இந்திய அரசோ ராஜீவோ ஏன் இந்திய ஊடகங்களோ அனைத்துமே தொடர்ந்து இலங்கை அரசுக்கு சார்பாகவே செயற்பட்டன. நாம் காந்தி தேசம் , பெருந்தன்மை உள்ளவர்கள் எனத் சுய தம்பட்டம் அடித்தன.சிறிது கூட மனசாட்சி இல்லாது, நாம் தூண்டி விட்ட பிரச்சனை என்றும் பாராது தனது தேவை தீர்ந்ததும் ,இந்தியப் படைகளை அனுப்பி தானே தமிழ் மக்களை அடுக்கி கொன்று பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் செயற்பாட்டையே இந்திய அரசு செய்ய ஊடகங்கள் ஆதரித்து வெகுஜனக் கருத்தை தாமே உருவாக்கின.அப்போதெல்லாம் மௌனமாக இருந்த இவை அனைத்தும் ,ராஜிவ் கொல்லப்பட்டபின் ,தமது தனிப்பட்ட நலன்களை நிலை நாட்ட ராஜிவ் கொலையைப் பயன்படுத்தி மறைமுகுகமாக தமிழினப் படுகொலையில் பங்குகொண்டன.

1987ல் கைச்சாத்தான அந்த ஒப்பந்தை இன்றும் இந்தியா தனது நலன்களுக்காக பாதுகாத்து , அந்த அரைகுறை ஒப்பந்தில் ஈழ தமிழருக்காக இருந்த சில உரிமைகளை சிங்கள அரசுகள் காலத்துக்கு காலம் பர்ரித்த போது இறையாண்மை என்று சொல்லி வாளாக இருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே ஆயுதம் வழங்குகிறோம் எனக் கூறி தமிழ் மக்கள் கொலையில் தானும் பங்கு கொண்டது. இப்போது ராணுவ ரீதியில் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டபின்னரும் , இலங்கை அரசை ஐ நா சபையில் தனது பரம வைரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் சேர்ந்து காப்பாற்று கின்றது , இலங்கை அரசை தமிழ் மக்களுக்கு நியாய தீர்வை வைக்குமாறு நாமும் வற்புறுத்த மாட்டோம் , யாரும் வற்புறுத்தவும் கூடாது என்று மார்தட்டி நிற்கின்றது.

இன்னமும் ராஜிவ் கொலையே இதற்கு காராணம் எனக்கூறும் புத்தி ஜீவிகளிடம் நான் கேட்பது இந்தக் கேள்விகளைத்தான்

1.இப்போது ராஜிவ் என்று துடிப்பவர்களே ,அவர் சிங்களவர்களால் தாக்கப் பட்டு தாக்கப் பட்டவன் தேசிய நாயகனாக உருவகப்படுத்தப்பட்டபோது எங்கே போனீர்கள் ?

2.இந்திய அரசு வைத்த திட்டத்தில் நில மற்றும் போலீஸ அதிகாரங்களை இலங்கை மறுத்தபோதும் இந்தியா தமிழர்களை வற்புறுத்தியதே அப்போது என்ன செய்தீர்கள்

3.இந்திய ராணுவம் தமிழர்களைக் கொன்று பாலியல் வல்லுறவுகளை நடத்தி சொத்துகளை சூறையாடியதே அப்போது எங்கிருந்தீர்கள்

4.இப்போது வாய் கிழிய ராஜிவ் என முழங்கும் தமிழக காங்கிரஸ் வீரர்களே அப்போது ராஜிவின் இறுதிக் கூட்டத்திற்கு வராமல் எங்கே போனீர்கள் ?

5.இப்போதுதான் புலிகள் இல்லையே ஏன் இன்னும் இலங்கை அரசை இந்தியா பாதுகாக்கிறது என்று இப்போது கூட நீங்கள் கேட்கவில்லையே ஏன் ?

6.விடுதலைப் புலிகள் தமிழர்களை சிறை பிடித்தாக கூறிய இந்திய அரசு இன்னும் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் சிங்கள அரசால் அடைத்து வைத்தது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன் என்று இனிமேலாது கேட்பீர்களா?இல்லை இன்னும் ராஜிவ் மரணம் தான் காரணம் எனக்கூறி தமிழினப் படுகொலைகளை நியாயப் படுத்துவீர்களா ?

14 comments:

நந்தன் said...

நியாயமான கேள்விகள் , இனியாவது இந்தியா நியாயமாக செயல் படுமா ?

good one, i will share to my friends

நன்றி நந்தன் , தனது நலன்களுக்கு மாறாக சிங்கள அரசு செயற்படத் தொடங்கும் நேரத்தில் , இந்தியாவுக்கு தமிழர் மேல் காதல் மீண்டும் எழும்.

நன்றி அனாமி , பெயரைக் குறிப்பிட்டு சென்றிருக்கலாமே

இந்தியா எதற்காக தமிழர்களையும் புலிகளையும் அழித்து தனது சுயநலம் ஒரு போதும் அடையப்போவதில்லை

மாறாக இலங்கையினால் விரைவில் இந்தியாவுக்கு ஆப்பு அடிக்கப்படும்

சீனாவும் பாக்கிஸ்தானும் இலங்கையும் சேர்ந்து ஆப்படிக்கும்

அப்போது தெரியும் ஈழத்தமிழர்களின் இழப்பும் வலியும்

எல்லாம் சரி வெள்ளாள யாழ்பாண சமூக போராட்டம் தமிழ் தேசிய போராட்டம் ஆக ஆனது எப்படி?

1.இப்போது ராஜிவ் என்று துடிப்பவர்களே ,அவர் சிங்களவர்களால் தாக்கப் பட்டு தாக்கப் பட்டவன் தேசிய நாயகனாக உருவகப்படுத்தப்பட்டபோது எங்கே போனீர்கள் ?

அதுக்கு தானே இப்போ பாதி சிறிலங்காவை இந்திய முதலாளிகள் கொள்வனவு செய்து விட்டார்கள்


2.இந்திய அரசு வைத்த திட்டத்தில் நில மற்றும் போலீஸ அதிகாரங்களை இலங்கை மறுத்தபோதும் இந்தியா தமிழர்களை வற்புறுத்தியதே அப்போது என்ன செய்தீர்கள்

பிரபா மாதிரி ஒரு முட்டாள் தான் எல்லாமே ஒரு இரவில் மாறும் என எதிர்பார்க்க முடியும்..யார் சொன்னது அந்த ஒப்பந்தம் தான் முடிவு என்று.. எதையுமே பிரபா நடைமுறை படுத்த விடவில்லை..

3.இந்திய ராணுவம் தமிழர்களைக் கொன்று பாலியல் வல்லுறவுகளை நடத்தி சொத்துகளை சூறையாடியதே அப்போது எங்கிருந்தீர்கள்

இந்திய இராணுவம் இலங்கையில் இறங்கியவுடனேயே பெண்களின் சீலையை உருவினார்களா?

4.இப்போது வாய் கிழிய ராஜிவ் என முழங்கும் தமிழக காங்கிரஸ் வீரர்களே அப்போது ராஜிவின் இறுதிக் கூட்டத்திற்கு வராமல் எங்கே போனீர்கள் ?

அப்போ புலிகள் ராஜீவை கொல்லவில்லையா... எல்லாருமே நம்புவது புலிகள் யாரிடமோ காசு வாங்கி கொண்டு ராஜீவை கொண்டிருக்கிறார்கள்.. பிரபா நினைத்தது..ஒரே கல்லில் ரண்டு மாங்காய் என்று.. கடைசியில்..அதாலேயே ஒரு இனத்தையே அழித்து விட்டான்..

5.இப்போதுதான் புலிகள் இல்லையே ஏன் இன்னும் இலங்கை அரசை இந்தியா பாதுகாக்கிறது என்று இப்போது கூட நீங்கள் கேட்கவில்லையே ஏன் ?

அப்போதும்..இப்போதும் இலங்கை தமிழர்களை பற்றி யார் கவலைபட்டது? இலங்கை தமிழர்..இந்தியாவிற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள் ஆனால் கவலைப்படலாம்..
அவர்கள் அப்படியா?? :)


6.விடுதலைப் புலிகள் தமிழர்களை சிறை பிடித்தாக கூறிய இந்திய அரசு இன்னும் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பிகளுக்குள் சிங்கள அரசால் அடைத்து வைத்தது பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன் என்று இனிமேலாது கேட்பீர்களா?இல்லை இன்னும் ராஜிவ் மரணம் தான் காரணம் எனக்கூறி தமிழினப் படுகொலைகளை நியாயப் படுத்துவீர்களா ?

அந்த மூன்று லட்சம் மக்களையும் இலகுவாக விட முடியாது..ஏனென்றால் அந்த முட்டாள் பயல் பிரபா எல்லாருக்கும் ஆயுத பயிற்சி அளித்து அதை படங்களாக பீத்தி அடித்து கொண்டானே...ஆகவே அந்த மக்களுக்கு ஆப்பு வைச்சது பிரபா தான்... சிங்களவனா பார்த்து விட்டால் உண்டு.. இல்லன்னா அங்கே ஒரு கலப்பு இனம் தான் உருவாகும்... சிங்களவனுக்கு எல்லாத்தையும் கையில் கொடுத்தது சாட் சாத் பிரபாவே.

//
இந்தியா எதற்காக தமிழர்களையும் புலிகளையும் அழித்து தனது சுயநலம் ஒரு போதும் அடையப்போவதில்லை

மாறாக இலங்கையினால் விரைவில் இந்தியாவுக்கு ஆப்பு அடிக்கப்படும்

சீனாவும் பாக்கிஸ்தானும் இலங்கையும் சேர்ந்து ஆப்படிக்கும்

அப்போது தெரியும் ஈழத்தமிழர்களின் இழப்பும் வலியும்
//

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோற்றுப் போன ஒன்று. ஈழத்திலும் சரி நேபாளத்திலும் சரி இந்தியா தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுகொண்டு விட்டது

//
எல்லாம் சரி வெள்ளாள யாழ்பாண சமூக போராட்டம் தமிழ் தேசிய போராட்டம் ஆக ஆனது எப்படி?
//
இங்கே சாதி எங்கே வந்தது ? ஈழப் போராட்டத்தில் ஆயுதமேந்திய பலர் மற்றும் பெரும்பாலான தலைவர்கள் மற்றைய சாதிகளை சேர்த்தவர்களே. வெள்ளாள அடக்கு முறையை மட்டுபடுதியதே ஈழப் போராட்டம் தான்

வணக்கம் வெத்து வேட்டு,

நீங்களே இந்திய அரசு மற்றும் சிங்கள அரசின் நோக்கங்களை கூறி விட்டீர்கள் நன்றி

இனியும் யாழ்ப்பான போராட்டம் வேளாளப் போராட்டம் என பிரிக்க வேண்டாம்

நன்றி அன்பன் இது தமிழ் தேசிய போராட்டம்

ஈழப் போராட்டம் சாதி வெறியைக் கட்டுபடுதியதே தவிர வேர் அறுக்கவில்லை. இன்னும் ஈழத்தில் சாதி நிலவுகின்றது

மக்கள் உணரும்வரை முற்றாக ஒழிக்கமுடியாது ஆனால் , விடுதலைப் போராட்டம் பெருமளவு கட்டுபடுதியது