எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை ,எது நடக்கிறதோ அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கவில்லை என்ற நிலையில் எது நடக்கப் போகின்றதோ , அதுவாவது நன்றாக நடக்க கூடாத என்பதே ஈழத் தமிழரின் இன்றைய ஏக்கம்.இந்த நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது வரை எதிரும் புதிராக இருந்த புலிகளின் சர்வதேச செயலகமும் புலனாய்வுத் துறையும் ஒன்றாக இயங்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலெழுந்து வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் "நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்" பற்றிய ஒரு குழப்பமான மனநிலையே காணபடுகின்றது.
இலங்கையில் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்கள் மத்தியில் புலிகளும் இல்லாத நிலையில் இது தம்மை எவ்வாறு பாதிக்கப் போகின்றது என்ற அச்சமுற்ற வினாக் குறியே எழுந்து நிற்கின்றது. சிங்கள கொலை வெறி அரசால் முள்ளுக் கம்பிகளுக்குள் அடைக்கப்பட
அந்த மூன்று லட்சம் உறவுகளே வெளியுலக நடப்புகள் எதுவுமறியாது ஆண்களானால், எப்போது கடத்தப் பட்டு கொலை செய்யபடுவோமோ என்றும் பெண்களானால், இதை விட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் படுவோமோ என்ற சூழ்நிலையில் உயிரைக் கையில் பிடித்தபடி வாழ்ந்து வருகின்றனர். புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில்,இது அவர்களின் இருப்பைப் பாதிக்கும் என்ற நிலை இல்லாதபோதும் இது எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்ற எண்ண மோதல்களே தற்போது காணபடுகின்றது.
இவ்வாறான நிலையில் எமது மாற்றுக்கருத்தாளர்கள் தமது வக்கிரத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.மகன் இறந்தாலும் பரவாயில்லை,மருமகள் பொட்டிழக்க வேண்டும் என்ற முது மொழியை மனதில் ஒரு பேரு மூச்சோடு நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.இந்த நிலையில் ஏன் தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் அவசியம் என்று பார்தால் அது ஒரு வரலாற்றுத் தேவை என்றே புரிந்து கொள்ளலாம். இதுவரை காலமும் போராட்டத்தை முன்னெடுத்து வந்த புலிகள் இயக்கம் முற்றாக இராணுவ ரீதியில் அழிக்கப் பட்ட நிலையில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்ல ஒரு அமைப்பு அவசியம்.இன்று இலங்கையில் முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்ட அந்த மூன்று லட்சம் மக்களை மீட்டு சொந்த இடத்தில் குடியமர்த்தவும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து உலகளவில் குரல் கொடுக்க எம்முள் ஒற்றுமை அவசியம். அதனைக் செய்வதற்கு ஒரு அமைப்பு அவசியம்.
வெறுமனே ஒரு அமைப்பாக மட்டும் இல்லாது நாடு கடந்த அரசாங்கம் என்ற பெயரில் , உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை ஜனநாயக ரீதியில் ஒன்றிணைக்கும்போது , ஓரளவேனும் உலகநாடுகளின் கவனத்தை எம்மேல் திருப்பி , எமது மக்களின் இருப்பை உறுதிபடுத்த முடியும். அவ்வாறு அடிப்படை உரிமைகளை உறுதிப் படுத்தியவாறு எமது போராட்டத்தையும் முன்னெடுக்க முடியும். ராஜிவ் காந்தி கொலையைக் காரணம் காட்டி தனது பிராந்திய நலனுக்காக ஈழத் தமிழின ஒழிப்பில் முக்கிய பங்காற்றிய இந்தியா கூட ,இந்த அமைப்புக்கு வேண்டா வெறுப்பாக வேண்டியும் உதவ வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு சிங்கள இனவெறி அரசின் சீனா மற்றும் பாகிஸ்தானுடனான நெருக்கமும் ஒரு காரணமாக அமையும்.
இந்த நிலையில் இந்த நாடு கடந்த அரசாங்கமானது பின்வருவனவற்றை கருத்திற் கொள்ளவேண்டும்.
1. ஜனாயக ரீதியில் பிரதிநிதிகளை வாக்கெடுப்பு மூலம் அந்தெந்த புலம் பெயர்ந்த நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தல்
2. இவ்வாறு தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிகள் மூலம் ஒரு செயல் குழுவை உருவாக்க வேண்டும்.
3. இந்த தேர்தல்களில் , மாற்றுக் கருத்துள்ள குழுக்களையும் இணைத்து மக்களிடம் முடிவெடுக்கும் அதிகாரத்தை விடவேண்டும்.
4. சேகரிக்கும் நிதிகள் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.
5. இனவெறி, சாதிவெறி, மதவாதம் , பிரதேசவாதம் என்பவற்றை நிராகரித்து , முஸ்லிம் மற்றும் மலையக மக்களையும் அரவணைக்க வேண்டும்.
இதைபோல மேலும் பல நல்ல அம்சங்கள் எமது மக்களுக்கு தோன்றலாம்.அவற்றை தேர்தெடுத்து கடைபிடித்தால் , உலக நாடுகளின் நன்மதிப்பை பெறுவதோடு , எமது உரிமைகளையும் விரைவாக பெற்றுக் கொள்ளலாம். இதில் ஒவ்வொரு ஈழத் தமிழனதும் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அவசியம். அவ்வாறு அமையும் பட்சத்தில் , வெற்றி சாத்தியமானதுதான் சந்தேகமே வேண்டாம்.
என்னைப் பற்றி....
Welcome
எனது பதிவுகளை தமது தளங்களில் மீள் இடுகையிட விரும்புவோர் , எனது தள முகவரியை கண்டிப்பாக அந்தப் பதிவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிடின் படைப்புத் திருட்டு என்றே கருதப்படும். நன்றி
Blog Archive
-
▼
2009
(18)
-
▼
June
(6)
- ராஜிவ் காந்தி கொலையே , இந்தியாவின் ஈழத் தமிழின ஒழி...
- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் - வரலாற்றுத் தேவை
- இனவெறி யுத்த வெற்றி இலங்கைக்கு T20 உலக கிண்ணத்தை ப...
- காந்தியின் உண்ணாவிரதம் - இன்று ??? அல்லது பாந்த...
- மாற்றுக் கருத்தாளர் ரயாகரனுக்கு ஒரு வேண்டுகோள் : ...
- (ஏ) மாற்று கருத்தாளர்களின் அடுத்த இலக்கு யார்?
-
▼
June
(6)
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
Labels:
ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)

10 comments:
உங்கள் பதிவு paristamil வெளிவந்துள்ளதே ?
நீங்கள் தான் ரேணுவா ?
http://www.paristamil.com/tamilnews/?p=17109
நான் கண்டும் காணான். ஏனோ தெரியவில்லை பாரிஸ் தமிழ் என்னுடய படைப்பை என் தள பெயரிடாமல் பிரசுரித்துள்ளது. நான் கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லை. என்னுடய பதிவை யாரும் பயன் படுத்துங்கள் ஆனால் எனது தள முகவரி அவசியம்.
என்ன செய்ய நம்மால் பரிதாபபடுவதை தவிர:(
நீங்கள் செய்யக் கூடியதெல்லாம் ஈழ தமிழர்களின் அவல நிலையை உங்கள் நண்பர்கள் உறவினரிடம் எடுத்து சொல்லி தமிழின விரோதிகளின் பொய்ப் பரப்புரையிலிருந்து தெளிவுபடுத்தலாம்
இதெல்லாம் சேர வேண்டியவர்களிடம் போனால் சரி...
இதைப் போலவோ அல்லது இதை விட சிறந்த திட்டங்கள் அவர்களிடத்தில் இருக்க கூடும். இருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனை
வணக்கம் நண்பரே
உங்கள் ஆக்கம் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றோம். அதை பிரசுரித்தோம்.
இப்போது உங்கள் மூலத்தை இணைத்துள்ளோம்.
நன்றி
நன்றி பாரிஸ் தமிழ் , நீங்கள் நான் பதிவிடும் எந்தப் பதிவையும் , உங்கள் இணைய தளத்தில் பிரசுரிக்கலாம். எவ்வித அனுமதியும் தேவையில்லை. ஆனால் எனது தள முகவரியைக் கொடுத்துவிடுங்கள். எனது மற்றைய பதிவுகள் வாசகர்களை சென்றடைய அது உதவும். நன்றி
ellam thevaithaan
நன்றி நண்பரே
Post a Comment