கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

காந்தி உண்ணாவிரதமிருந்துதான், பிரித்தானியாவிடமிருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக இன்னும் பல அறிவுஜீவிகள் திருவாய் மலர்ந்து வருகின்றனர். இந்தக் கதை அனைத்து மக்களுக்கும் தெரிந்ததுதான். இப்போது நாம் ஒரு புதுக்கதை நம்மில் பலருக்கு தெரியாத கதையைப் பார்க்கலாம். இந்த கதையின் நாயகன் பெயர் , பாந்தி அத்துடன் அடிகளோ ஜீ என்றோ உங்க விருப்பத்துக்கு ஏற்றமாதிரி சேர்த்துக்கொள்ளலாம். இவர் போராடியது ஹிந்தியா எனும் நாட்டுக்கு எதிராக , அமிழகம் எனும் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுக்க என்று வைத்துக் கொள்ளலாம்.

காந்தியின் உண்ணாவிரதக் கதைக்கு ஒத்த கதை என்றதும் , யாரும் நம்ம நாயகன் பாந்தி , காந்தி மாதிரி குணவியல்பு கொண்டவன் என்றோ , ஹிந்தியா பிரித்தானியா மாதிரி என்றோ கற்பனை செய்யக் கூடாது. அப்போ எப்படின்னு நீங்க கேட்கலாம். சுருக்கமா சொன்னா , நம்ம பாந்தி , அந்த காந்தியை விட உண்மையிலேயே நல்லவன். ஆனா இந்த ஹிந்தியாவோ , அந்த பிரித்தானியாவை விட ரொம்ப கெட்ட தேசம். சரி இவ்வளவு விளக்கம் போதும் நாம் இப்போது கதைக்குப் போவோம்.

இந்தியா காந்தியை தலைவனாக ஏற்றுக்கொண்ட மாதிரி , அமிழக மக்களில் பெரும்பாலோனோர் நம்ம பாந்தியை ஏற்றுக்கொள்ள , பாந்தியும் , உண்ணாவிரதம் , உப்பு அள்ளுதல் எனக் கலக்க ஆரம்பித்து விட்டார். இதப் பார்த்து ஹிந்தியாவுகோ ஒரே ஆச்சரியம் நம்ம பிரித்தானியா என நினைத்து காமடி கீமடி இந்த பாந்தி பன்றாரோ என ஒரே குழப்பம். இதில ஒரு விடயம் எல்லாருக்கும் சொல்லணும் , இந்த ஹிந்தியா வந்து , போனியா என்னும் பெண்ணால் , பண மோகன் சங்கு என்பவரை வந்து ஆளப் பட்டது. அவரும் அமிழக விடயங்களை கவனிக்க , நாறவாயன் மற்றும் சவ பங்கர் கூனன் என இரண்டு பேரை வைத்திருந்தார். இந்த இரண்டு பெரும் அடிகடி அமிழகம் போய் வந்து , கைப்புள்ள கணக்கா , சொந்த ஊருல வந்து பச்சைப் பொய்யா சொல்ல அமிழக மக்களின் இனத்தை சேர்ந்த , ஹிந்தியாவில் வாழும் மற்றவர்களும் அப்படியே கண்ணை மூடிக் கொண்டு நம்பிவிடுவார்கள்.இது ஒரு ஒரு நல்ல நகைச்சுவையாக ஹிந்தியாவின் ஆட்சியாளர்களுக்கும் மற்றைய இன மக்களுக்கும் அமையும்.

என்ன செய்யலாம் எனத் தலையைப் பிய்த்துக் கொண்ட போனியா , பண மோகன் சங்கு , நாறவாயன் மற்றும் சவ சங்கர் கூனன் சில முடிவுகளுக்கு வநது அவற்றை அமுல் படுத்த தொடங்கினர். இந்த கதையில இன்னும் சில காமடியன்கள் , தண்டநிதி , மாயலலித்தா என நீளும், ஆனா அப்புறம் எப்படி இந்த கதையை கொஞ்சம் சீரியசா முடிகிறதாம் . அதனால அதப் ஒரு முழு நீள நகைச்சுவை சித்திரமா பிறகு பாப்போம். இப்போ கதைக்கு திரும்புவோம்.

முதலில் அதே இனத்தை சேர்ந்த தண்ட நிதியை தூண்டி விட்டு , பாந்தி என்னுடய நண்பன் ஆனால் அப்புறமா நான் அப்படி சொல்லவேயில்லை நான் சொல்றது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்றும் பல்டி அடிக்க செய்தனர் . இதில ஒரு விடயம் எல்லாருக்கும் தெரியனும் , இந்த தண்ட நிதி , தான் உலக அமிழ் மக்களின் தலைவர் எனத் தனக்கு தானே பட்டம் சூடிக் கொண்டவர். அவருக்கு பாந்தி கதநாயகனாவது வேப்பம் காயாக கசந்தது. அதோட மாயலலித்தாவுக்கோ , அமிழ் மக்களுக்கு அதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் பிடிக்காது அப்படி ஒரு காரக்டர் அவங்க. அவங்க ஒரு பெரிய தத்துவ முத்த உதிர்தாங்க , " போர் என்றால் மக்கள் சாவது இயல்பு" அப்படின்னு. இப்படியே இவங்க அரசியல் பண்ணி , ஹிந்தியாவுலுள்ள அமிழ் இன மக்களின் இன உணர்வை திசை திருப்பிக் கொண்டிருந்தாங்க. ஆனால் பாந்தியோ அமிழ் இன மக்களின் ஒப்பற்ற தலைவனாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வந்தார்.

போனியா அன் கோ ரொம்ப கடுபடைந்து விட்டனர். சரி , பாந்தி சுக போக வாழ்வு வாழ்கின்றார் என ஒரு கட்டு கதையைப் பரப்பி பார்த்தனர். ஒண்ணுமே வேலைக்காகல. சரி பிரிடிஷ் அரசு போல விட்டுப் பிடிக்கலாம் என்றா , அந்த காந்தி போல சொந்த மக்களுக்கு எதிரா உண்ணாவிரதம் இருக்கின்ற ஆளும் இந்த பாந்தி கிடையாது. அதே நேரம் ஹிந்தியாவுக்கு ஒரு விடயம் வயிற்றில் புளியைக் கரைத்தது. அந்த காந்தி, அவ்வளவு வஞ்சித்தே , மக்கள் அப்படி நேசிச்சாங்க. இப்படியே விட்டால் பாந்தி , தன்னிகரற்ற தலைவனாகி, உறங்கிக் கொண்டிருக்கும் ஹிந்திய அமிழ் மக்கள் உரிமை கேட்பார்களோ என்று ஒரே கலக்கம். இந்த ஹிந்திய அமிழ் மக்கள் எப்படின்னா , தம் பகுதியை சுத்தி இருக்கும் அனைவரும் சேர்ந்து வீடு கட்டி அடித்தாலும் கண்டுக்கவே மாட்டார்கள். இத குண இயல்பை பாந்தி மாத்திடுவாரோ என பயந்தே போய்ட்டாங்க. சரி நம்ம அரசியல காட்டலாம் என நினைச்சாங்க. பாதியை மதம் மற்றும் ஜாதி கூறி ஒரே பிரச்சாரம் பண்ணினாங்க. பாந்தி ஒரு பயங்கரவாதி என்னாங்க. ஹ்ம்ம் அமிழ் மக்கள் ஆசையே வில்லை. சரி என்ன பண்ணலாம் என யோசிச்சாங்க. நம்ம பாந்தி தான் அஹிம்சை வாதியாசே , பாதுகாப்புக்கு யாருமே கிடையாது. தமது குண்டர் படையை அனுப்பி நள்ளிரவில் போட்டு தள்ளி விட்டு , சொத்து மோதலில் பாந்தியை சொந்த கட்சிக் காரனே கொன்றதாக கூறி , பாந்தி கட்சிக்காரன் எல்லாரையும் சிறையில அடைச்சாங்க. குழம்பிப் பொய் இருந்த மக்கள் மத்தியில , பாந்தியைப் பற்றிய பல்வேறு கட்டுக் கதைகளை பரப்பினாங்க. இலங்கையில் போர் நிறுத்தம் என உலகத்தில் குறுகிய நேரம் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்த கருணாநிதி அறிவிக்க எப்படி அவரது குடும்ப மீடியா அதை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்றதோ அப்படி அதே மாதிரி என்னு நீங்க வைச்சுக்கலாம்.

எல்லாம் முடிஞ்சப்புறம் , போனியா அன் கோ கூடிப் பேசினாங்க. அவங்க எல்லாருக்குமே ஒரே ஒரு ஆச்சரியம் , அந்த பிரிடிஷ் காரன் ரொம்ப கேனையனா இருப்பான் போல இருக்கே . மீடியாவினால் சூழப்பட்ட இந்த நேரத்திலேயே , நாம இப்படி ஒரு கொலை பண்ணி அத அப்படியே மறைத்து விட்டோம். ஆனா பிரிடிஷ் காரன் அந்த காந்தியை ஒண்ணுமே பண்ணாம பூப் பறிச்சுக் கொண்டா இருந்தான் எனப் பேசி தமது ராஜ தந்திரத்தை மெச்சிகொண்டனர் தன்னயே நக்கி இன்புறும் நாய்கள் போல. இதில என்ன பெரிய்ய ஜோக் என்றால் , இப்பவும் சில புத்திசாலிகள் , காந்தி வழியே நல்லது என்னு என்று சொல்லீட்டு இருக்காங்க எனக் கூறி போனியா குலுங்கி குலுங்கி சிரிக்க நம்ப கதை சுபமே முடிவடையுது.

குறிப்பு : முன்னரே குறிப்பிட்டது போல இது ஒரு கதையே . யாரும் இதை நிகழ் காலச் சம்பவங்களுக்கு முடிச்சு போட்டு என்னை திட்டக் கிளம்பக் கூடாது.படிச்சமா சிரிச்சமா என்னு போய்க்கினே இருக்கணும்.மகிழ்ச்சியை வேணும்னா பின்னுட்டமா பகிர்ந்துகோங்க :-)

20 comments:

:)))))))))

என்ன கண்ணன் , சும்மா சிரித்து விட்டு மட்டும் போய் விட்டீர்கள் ? :-)

hahaha siricachu pothuma

ithukku mela yaarthaan kaanthi kaaranam enru sollap poraan?

ஹ்ம்ம் இந்த நிலை கெட்ட புத்தி ஜீவிகளை நினைத்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லை நண்பர்களே. அங்கே எமது உறவுகள் உயிர்ப் போராட்டம் நடத்த இதுகள் இங்கே வியாக்கியானம் கொடுக்குதுகள்

i'm not laughing for this :-(

அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் நண்பரே , :-)

கதையின் பின்னாலுள்ள நிஜம் சுடுகின்றது

i agree with lasy anony :-(

//தன்னயே நக்கி இன்புறும் நாய்கள் போல//

நல்ல சொன்னிங்கா

புயலுக்கு பின் அமைதி வந்தே ஆகனும்...

தீமைக்குளும் சிறு நன்மையுண்டு ....

paarpom ..........

வணக்கம் செந்தேள் , உங்கள் கருத்தை கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா ?

ithu koota puriyalaiya KAANNAN

அவர்களை நாய்கள் என்று சொன்னீர்களே அது ரொம்ப கரெக்டு

எனது நோக்கம் நாய் என்பதல்ல. ஆனால் இந்த கதையின் கதாப் பாத்திரங்கள் அவ்வாறே நடந்து கொண்டன

கதைப் பாதிரன்ங்கள் ஹஹ

ஆமாம் நண்பரே கதா பாத்திரங்களே , வீண் கற்பனை வேண்டாம்

ok we belive

இப்படி திட்டி திட்டியே , உங்களை நீங்களே அழித்து விடீர்களே இனிமேலாவது புத்திசாலித்தனத்துடன் செயற்படுங்கள்

எமது நிலை இவ்வாறன புத்திமதிகளை பெற்றுக் கொள்ள வழிகோலிவிட்டது . ஹ்ம்ம்