கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

இந்து பத்திரிகை பற்றியோ அல்லது என். ராம் பற்றியோ எவ்வித அறிமுகமும் கொடுக்கதேவையில்லை.நூற்றாண்டு காலாமாக,பத்திரிகைத் தொழிலை நடத்தி வரும் குடும்ப பாரம்பரியத்தை உடையவர் இந்த ராம். இலங்கையில் பதவியிலிருந்த அனைத்து ஜனாதிபதிகளுடன் தனிப்பட்ட நட்பு பாராட்டிவருபவர். இந்த நட்பு எப்படிப்பட்டது எனில் , ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்டாலும் இந்த நட்பு மென்மேலும் இருகுமே தவிர விரிசல் காணாது. ராமுக்கு சிங்கள ரத்னா விருது வழங்கியதும் இந்த நட்புதான், எழுதமுடியாத இன்னபல வழங்கியதும் இந்த நட்புதான்.

சிங்கள அரசு அகதி முகாம் என்ற போர்வையில் நடத்திவரும் வதைமுகாம்களுக்கு சிங்கள அரசினர் மற்றும் அரச ஊடகங்கள் தவிர யாரும் செல்ல அனுமதி கிடையாது. சிங்கள எதிர்க் கட்சியினர் கூட அங்கு செல்ல முடியாத நிலையே காணபடுகின்றது. ஐ நா செயலர் வந்த ஒருதடவை மட்டும் வெளிநாட்டு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் அங்குள்ள மக்களை சுதந்திரமாக ஊடகவியலாளர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.

இந்த நிலையிலேயே இந்து ராமின் விஜயமும் இடம்பெற்றிருந்தது. அப்படியே முழு பூசணிகாயை மறைத்து , முகாமின் தரத்தை ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்திருக்கும் ராம் , இறுதியாக , தமிழக அரசு நடத்தி வரும் முகாமை விட பல மடங்கு சிறந்தது சிங்கள அரசு நடத்தி வரும் வதை முகாம் என்று கூறி இந்திய தமிழக அரசுகளின் லட்சணத்தையும் போட்டுடைக்கிறார். ஒருவேளை இந்திய குடிஉரிமை துறந்து ரகசியமாக சிங்கள குடிமகனாக மாறிவிட்டாரோ தெரியவில்லை. இங்கே இந்து ராமின் கருத்துகள் , ஐ நா செயலர், இலங்கை தலைமை நீதிபதி , அனைத்துலக பத்திரிகைகள் ஆகியவற்றின் கருத்துகளுடன் நூறு சதவீதம் மாறுபடுகின்றது. சிங்கள அரசின் எலும்புத் துண்டுக்காக ஐ நா செயலரையே பொய்யராக்கி விட்டார் இந்த ராம்.

இதுவரை காலமும் புலிகளின் பெயரைச் சொல்லி , சிங்கள அரசை நியாயப் படுத்திவந்த ராம் போன்ற பத்திரிக்கையாளர்கள் இப்போது என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள் ? உண்மையில் இவர்களது வெறுப்பெல்லாம் பாவப் பட்ட ஈழத் தமிழினம் மேல்தான். அடக்கப் பட்ட தமிழினம் உரிமை கூறி போராடுவதை இவர்களால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை.இந்த நிலையில் , அடுத்துவரும் நாட்களில் யார் யார் எல்லாம் சிங்கள அரசின் விருந்தினராக சென்று முகாம்களுக்கு தரச் சான்றிதழ் கொடுக்க போகின்றார்கள் என்று சிந்தித்தால் பின்வரும் புத்திஜீவிகள் சோ , சுப்பிரமணியன் சுவாமி , மணிசங்கர் அய்யர் மற்றும் இளங்கோவன் போனால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

இந்து ராம் கூறியதற்கு பலபடி மேலே போய், தமிழக மக்களின் குடியிருப்புகளை விட சிங்கள அகதி மற்றும் வதை முகாம் சிறப்பானது எனற கருத்துகளை இவர்கள் உதிர்த்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.நாம்தான் எல்லாவற்றையும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டோமே.


தொடர்புடைய செய்திகள்

யாருக்கு தூதுவர்களாக செயற்படுகின்றன தமிழ்நாட்டு ஊடகங்கள்: 'தினமணி' சாடல்


செட்டிக்குளம் முகாமின் அவலம்: குடிதண்ணீரைப் பெறுவதற்கே 3 நாட்களாக வரிசையில் காத்திருக்கும் மக்கள்


மாணிக் பார்மில் வாரத்திற்கு 1400 தமிழர்கள் அநியாயமாக சாவு

4 comments:

http://www2.marketwire.com/mw/release_html_b1?release_id=517918
இங்கிலாந்தின் புகழ்பெற்ற டைம்ஸ்
என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
உலக்ப் புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்றவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்.
இப்போது உங்கள் கால்களில் உள்ளது
ராமின் கன்னத்திற்கு முத்தந்தரட்டும்.

ஏ! தாழ்ந்த தமிழகமே!
பழைய செருப்புக்காப் பஞ்சம்?

நன்றி தமிழன் , இவ்வாறான அடிவருடிகளை நாம் இனமா கண்டு ஒதுக்க வேண்டும்.

நந்தன் said...

இவர்களெல்லாம் மனிதர்களா ? தமிழனின் ரத்தம் குடிக்க வந்த பேய்கள்

தமிழர்களின் மத்தியில் குடியிருக்கும் இவர்களுக்கான சரியான பெயர் , ஒட்டுண்ணிகள்