கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

இதயத்து குமுறல்கள் தணிக்கை செய்யப்படாவிடில்
இம்மியும் உடல் கிடைக்காத கொலைகார தேசம்.

அங்கே முட்கம்பிகளுக்குள் கிழிபடும் எமதுயிர் உறவுகள்.
அவர்தம் உதடுகள் வெடிக்கும் எதற்கும் "புலி"தான் காரணம்.

உலகம் பதியும் வரலாற்றில் இவர்கள் "சூழ்நிலைக் கைதிகள்"

ஆனால் தமிழர்கொடி பட்டொளி வீசிய முழுமதிக் காலத்தில்
அந்தக் கொடிநிழலில் வாழ்க்கையோட்டி ஈழம் விற்று

தமிழ் தேசியம் பேசிய புலம்பெயர் உதடுகள் சில - இன்று
யதார்த்தம் பேசி தேய்பிறைக் காலத்திலும் குரைகின்றன.

நாம் ஒளியிழந்த இந்த அமாவாசைக் காலத்தில்
முதலையோ மெய்யோ,கண்ணீருக்கு இல்லை வித்தியாசம்.
அனைத்தையும் மறைக்கின்றது இருட்டு

நாளை இருள் நீங்கும் ஒரு வைகறைப் பொழுதில்
வரலாறு பெயரிடும் இவர்கள் "சந்தர்ப்பவாதிகள்"

4 comments:

தமிழன் என்ற இனம் எப்போது தோன்றியதோ அன்றே தூரோகிகளும் அவதரித்து விட்டனர்.

வணக்கம் அனானி , உங்கள் கருத்துடன் மன வேதனையுடன் உடன்படுகின்றேன்

//நாளை இருள் நீங்கும் ஒரு வைகறைப் பொழுதில்
வரலாறு பெயரிடும் இவர்கள் "சந்தர்ப்பவாதிகள்" //

இருள் நீங்க வேண்டுமென ஒவ்வொருநாளும் வேண்டுகிறோம். இனிய வைகறை எல்லாருக்குமாக வேண்டும்.
வரலாறு தன்னை வரிசைப்படுத்திக் கொள்ளட்டும். நாங்கள் வரலாற்றின் முனையாக நின்று நிமிர்வோம் கண்டும்காணான்.

சாந்தி

நன்றி சாந்தி, இருள் தற்காலிகமாக சூழ்ந்தாலும் நிரந்தர வெளிச்சம் விரைவில் பரவும்