01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
ஈழத் தீவினில் துன்பத்தில் உழல தமிழ் மொழியினை தாய் மொழியாக கொண்டமையால் வந்தது.
எமக்கு எம்மையே வெறுக்கும்படி ஆனபின் பெயர் மட்டும் பிடிக்குமா ?
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கடைசியாக எப்போது சிரித்தீர்கள் என்று கேட்டிருந்தால் சில வேளை பதில் அளித்திருக்க முடியும். அழுது கொண்டே இருப்பவரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வது
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
தலையெழுத்தே துன்பம் என்றான பின்பு கை எழுத்தாவது கால் எழுத்தாவது.
4.பிடித்த மதிய உணவு என்ன?
பட்டினியாகக் கிடக்கும் எமக்கு எது கிடைத்தாலும் அது பிடித்த உணவுதான்.அது எலிக் கறியோ ,கீரைக் கஞ்சியோ
5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
நிச்சயமாக மாட்டேன். தொப்புள் கொடி உறவுகள் என்று நினைத்த சொந்தங்களே முதுகில் குத்தும் ஒருவனுக்கு நீதி நியாயம் இருந்த காலமானால் நட்பு வைத்து உதவலாம். ஆனால் இந்த சுயநல உலகத்தில் எப்படி நட்பு வைத்துக்கொள்ள முடியும் . என்ன கருணாநிதி அவர்களே சரிதானே?
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அகதி முகாமில் குடிக்கவே தண்ணீர் இல்லாது அல்லல் படுபவனிடம் நல்ல கேள்வி ஐயா கேட்கிறீர்கள்
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கையில் பயங்கர ஆயுதமிருக்கா என்றே பார்ப்போம்
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
அதுதான் ஏற்கனவே சொல்லிவிட்டோமே பிடித்த விஷயம் என்று ஒன்றும் கிடையாது. அப்படி நினைக்கவும் எமக்கு உரிமை கிடையாது.
பிடிக்காத விடயம் என்றால், இந்த பாழாப் போன இன உணர்வு , தன்மானம் மற்றும் சூடு சுரணை. இவை இருந்ததால் தானே எமது கதி இப்படியாகிப் போனது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
சரி பாதி என்றால் , தமிழக சகோதரர்கள் தானே ?
பிடித்தது , பக்கத்தில் இடியே விழுந்ததாலும் அமைதியாக இருப்பது. அது ஈழமாகட்டும் காவிரியாகட்டும் .
பிடிக்காதது என்றால் , எதுவுமே கிடையாது. ஹ்ம்ம்
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
எமக்கெல்லாம் இதுவரை காவல் தெய்வமாக இருந்தவர்கள் பக்கத்தில் இல்லையே இந்த அநியாயங்களை தட்டிக் கேட்க என்று வருந்துகின்றோம்.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
இதை எழுதும்போது மட்டுமல்ல எம்மிடம் எப்போது இருப்பதும் இந்த ஒரே கந்தலாடைதான். அதற்கு நிறமே கிடையாது.
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
யாரை நம்பி நாம் பிறந்தோம் மற்றும் ஆண்டவனைப் பார்க்கணும் அவனுக்கு ஊத்தணும்
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
இப்பவே எங்கள் ரத்த மை எடுத்துதானே , உலக ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன.
14.பிடித்த மணம்?
ஆண்டாண்டு காலமாக இந்த வெடி குண்டு மணத்திலும் பிண நாற்றம் மத்தியில் வாழ்ந்து , அதுவே பழகிவிட்டது
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
மீண்டும் பிடித்த விடயமா ? எங்களுக்கு அந்த உரிமையே கிடையாது கனவான்களே.
17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கையே எமக்கு மரண விளையாட்டு.
18.கண்ணாடி அணிபவரா?
எதைப் படிக்க போகின்றோம் இந்த முட்கம்பி முகாமில் , எதுவுமே இல்லையே எதுக்கு கண்ணாடி ?
19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
மூச் மீண்டும் "பிடிக்கும்"
20.கடைசியாகப் பார்த்த படம்?
தூள் காமெடி ஸ்டைலில் கருணாநிதியின் உண்ணாவிரதம். சூப்பரா இருந்தது.
21.பிடித்த பருவ காலம் எது?
ஹ்ம்ம் . மழை வந்தால் அகதி முகாம் வெள்ளக் காடாகும் வெய்யில் வந்தால் வெப்பு நோய்கள் தாக்கும். எதைத்தான் சொல்வது ?
22.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
மூச் , புத்தகம் படித்து புரட்சி செய்ய போகின்றாயா என்று அருமை சிங்கள ராணுவத்தினர் , முகாமில் வைத்தே போட்டுத் தள்ளிவிடுவார்.
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அப்படின்னா ? நாங்கள் மேசையைப் பார்த்தே பல காலம்
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
யுத்த விமானம் குண்டு வீசிப் போனபின்பு ஒரு சத்தம் கேட்கும். அந்த சத்தம் கேட்டே பதுங்கு குழியை விட்டு வெளியே வருவோம். அதுவே பிடித்த சத்தம்.
பிடிக்காதது என்றால் , இப்பொழுது காந்தியமும் அகிம்சையும் போதிக்கும் சந்தர்பவாதிகளின் குரலொலி.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
வீட்டைத் தொலைத்தே நாட்கள் பல ஆகிவிட்டன. இதில் தொலைவு எங்கே பார்க்க
26.உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
சத்தமாக கேட்காதீர்கள் , தமிழன் உனக்கேன் தனித்திறமை என்று போட்டுத் தள்ளிவிடப் போகிறார்கள்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
யார் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம் , ஏனெறால் நாங்கள் ஈழத்தமிழர். எமகென்று ஒரு விருப்போ கருத்தோ கிடையாது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எங்களை சூழத் தான் எல்லா சாத்தான் நாடுகளும் இருகின்றனவே
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
சிங்கள அரசு மற்றும் இந்திய ராணுவம் தயவால் இலங்கை முழுக்க கால் நடையாகவே பெட்டி படுக்கைகளுடன் சுத்தி பார்த்தாச்சு , ஏன் ராமேஸ்வரம் ,மேலை நாடுகள் முழுக்க புலம் பெயர்ந்தவர்களாக சுற்றுலா போயாச்சு.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
ஏற்கனவே சொல்லியாச்சே , எமகென்று ஆசையோ கருத்தோ கிடையாது.
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
சொந்த மனைவியையே கண்முன்னால் இழுத்து செல்வதை பார்க்கும் போது, மனைவி இல்லாமல் போகட்டும் என்பதே பிரார்த்தனை.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
நரகம்
என்னைப் பற்றி....
Welcome
எனது பதிவுகளை தமது தளங்களில் மீள் இடுகையிட விரும்புவோர் , எனது தள முகவரியை கண்டிப்பாக அந்தப் பதிவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிடின் படைப்புத் திருட்டு என்றே கருதப்படும். நன்றி
Labels
- இந்தியா (3)
- ஈழம் (17)
- கிரிக்கெட் (1)
- தமிழகம் (5)
ஆர்வலர்கள்
வாசகர்கள்
Labels:
ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)

17 comments:
அருமை
ஆனால் ஈழத் தமிழரின் நிலை அருமையாக இல்லையே வெண்காட்டான்
நூறு ரூவா ....
பிரியாணி ....
கழக ஆட்சியில கிடைச்ச அரசாங்க வேல ( என்னவோ இவனுவ வீட்டு சொத்துல இருந்து சம்பளம் தர்ற மாதிரி ) ....
தான் சாதிய தவிர மத்த சாதிகாரனுவ மேல சாதீயம் புசுறது ....
ரத்தத்துல ஊறின அடிமை புத்தி ...
இதற்க்கு மத்தியில் ஈழ ஆதரவா ? அப்டின்னா ?
அய்யா,
எங்களால் வருத்தப் படுவதை தவிர எதுவும் செய்ய முடியவில்லை...
ஈழத் தமிழர்களுக்கும் எங்களுக்கும் ஒரே வித்யாசம் தான்..
அவர்கள் ஈழத் தமிழர்கள்
நாம் ஈனத் தமிழர்கள்....
Please remove word verification
sariyaana saattai adi nanbare...
small suggestion;
use different colors for Q&A. and make Q in bold font.
ஹ்ம்ம் மக்களை நொந்து கொள்ளவதை விட்ட ஈனத்தனமான அரசியல்வாதிகளை தான் நொந்து கொள்ளவேண்டும்
ராம் தயவு செய்து உங்களை நீங்களே நொந்து கொள்ளவேண்டாம். ஒரு ஈழத் தமிழ் ஆதரவு சூழலை , உங்கள் நண்பர்கள் உறங்வினர் மத்தியிலேனும் உருவாக்க முயற்சியுங்கள்
நன்றி ஷாஜி விரைவில் மாற்றி விடுகின்றேன்
கண் கலங்க வைக்குது சில பதில்கள்
ஹ்ம்ம் வாழ்க்கையே கலங்க வைக்கும்போது பதில்கள் எம்மாத்திரம்
பிணங்கள் ஆளும் தேசத்தில், பிறந்த எங்களால், சத்தமாக அழக்கூட முடியவில்லை உறவே.....
அழ என்ன , வேறு ஏதும் தனிப்பட்ட காரணங்களுக்காக சோகமாக இருந்தாலும் , உடனே சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நாட்டில் பிறந்து தொலைத்துவிட்டோமே
மனசு கனத்துவிட்டது.......
இதயமுள்ளவர் எல்லாம் மனசு கலங்க இந்து ராம் , பணத்திற்காக எழுதுவதைப் படிக்க , இவனெல்லாம் மனிதனா என மனசு எரிகிறது
என்ன சொல்றதுண்ணே தெரியல.
:((((((
வணக்கம் மதிபாலா, இந்த துயரங்களை நான்கு பேருக்கு எடுத்து செல்லுங்கள்
Post a Comment