கண்டும் காணாமலும் ......

தமிழனாகப் பிறந்திட்ட ஒரே காரணத்தால் , எதையும் கண்டும் காணாமலும் இருக்க ஆசிர்வதிக்கப் பட்டு, நெஞ்சு நிமிர்த்தி இதுதான் என் கருத்து , என முழக்கமிட வக்கில்லாது , அடையாளத்தையே மறைத்தவனின் வலைப்பக்கம் இது.

துயரமும் அவநம்பிக்கையும் சூழ்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் தமிழ் உணர்வாளர்களும் தமிழின விரோதிகளும் தத்தமது நிலைக்கேற்ப கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். எப்போதும் தமிழினத்திற்கு எதிராகவே நச்சை உமிழும் விரோதிகள் ஒரேயணியில் இருந்து கொண்டு,எவ்வாறு புலிகளும் தலைவரும் கொல்லப்பட்டனர் என்று வர்ணித்து புளாங்கிதம் அடைய, தமிழின உணர்வாளர்களோ என்ன செய்வதறியாது திகைத்து போயுள்ளனர். இதில் ஒருபிரிவினர் , தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என்றும் இனி ஆகவேண்டியதை பார்த்து போராட்டத்தை ஜனநாயகவழியில் முன்னெடுத்து செல்லவேண்டும் என்று செயற்படுகின்றனர். மற்றைய பிரிவினரோ,இல்லை தலைவரும் புலிகளும் காடுகளில் பதுங்கி உள்ளனர் என்று கூறிவருகின்றனர்.

இந்த இரண்டாவது பிரிவினருள், பழ.நெடுமாறன், வைகோ மற்றும் திருமாளவன் அடங்குவர். இவர்கள் அடிக்கடி , ஈழப்போராட்டம் விரைவில் புலிகளின் தலைவர் தலைமையில் தொடங்கும் என்றும் காடுகளில் பதுங்கியிருக்கும் இருபதனாயிரம் புலிகளும் அப்போது வெளிப்படுவர் என்றும் பேசிவருகின்றனர். அவர்கள் கூறுவது உண்மையாக இருந்தால், கோடிகணக்கான தமிழர்களுக்கு அதைவிட மகிழ்ச்சியான செய்தி இருக்கமுடியாது.ஆயினும் உண்மையை உறுதிபடுத்திக் கொள்ளமுடியாதிருக்கும் இந்த காலப்பகுதியில்,இவ்வாறான கூற்றுகளும் அறிக்கைகளும் போராட்டத்தினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதை தடுப்பதாகவே அமையும்.

புலிகளின் தலைவர் வீரச்சாவடைந்தார் என்று செய்தியானது , ஒரு மிகப்பெரும் எழுச்சியையும் ஆர்பாட்டங்களையும்,தமிழகம் மற்றும் புலம் பெயர் நாடுகளில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு,"உயிருடன் உள்ளார்" என்று செய்தி வந்தபின்னர், அனைத்துமே நீர்க்குமிழி போல அடங்கிப் போய்விட்டன. இன்றுவரை மரணித்த அந்த வீரர்களுக்கு எந்தவொரு அஞ்சலிக் கூட்டங்களைக் கூட நடத்த முடியவில்லை.

"உயிருடன் உள்ளார்" என்பதற்கு பலமான வாதங்கள் இருக்கலாம். ஆனால் "உயிருடன் உள்ளார்" என்று நம்பி, அடுத்தகட்டத்திற்கு நகராது காத்திருந்து பற்பல ஆண்டுகளின் பின்னர் "வர முடியாது" எனும் நிலைஏற்படும் போது, எல்லாமே கைமீறிப் போயிருக்கும். அதைவிட , "இல்லை" என்று எழுச்சி கொண்டு போராட்டத்தினை வீறு கொண்டு நடத்தினோமானால், பின்னர் புலிகளின் தலைவர் மீண்டும் பிரசன்னமாக வரும் சூழ்நிலை ஏற்படின் அதைவிட ஒரு மகிழ்ச்சி உலகத்தமிழர்களுக்கு இருக்கப் போவதில்லை.

இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இல்லையென்று அடித்துக் கூறி மகிழ்ச்சிக் கூத்தாடும் தமிழின விரோதிகளின் செயற்பாடுகள், ஈழப் போராட்டத்திற்கு உரம் சேர்க்க, "உள்ளார்" என்று கூறி வரும் தமிழன உணர்வாளர்களின் செயற்பாடுகள், போராட்டத்தினை முடக்கவே பயன்படுகின்றது என்பதே யதார்த்தம். எனவே யாதர்த்தம் புரிந்து செயற்படுவோம்.

4 comments:

"உயிருடன் உள்ளார்" என்பதற்கு பலமான வாதங்கள் இருக்கலாம். ஆனால் "உயிருடன் உள்ளார்" என்று நம்பி, அடுத்தகட்டத்திற்கு நகராது காத்திருந்து பற்பல ஆண்டுகளின் பின்னர் "வர முடியாது" எனும் நிலைஏற்படும் போது, எல்லாமே கைமீறிப் போயிருக்கும்.


உணர்வாளர்கள் தங்கள் வாய்களை மூடுதலே சிறந்தது என்பது எனது கருத்து வருவார் வருவார் என மக்களை குழப்பாமல் இருந்தார்களானால் அதுவே நன்மைதான்.

சாந்தி

நன்றி சாந்தி. நீங்கள் சில வாரங்களுக்கு முன்னர் , இதே மாதிரியான வேண்டுகோளை தமிழக உணர்வாளர்களிடம் கேட்டிருந்தீர்கள். ஹ்ம்ம் என்ன செய்வது இன்னும் அவர்கள் உணரவில்லையே

நந்தன் said...

காலத்திற்கு ஏற்ற பதிப்பு

வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

Tamil10.com